முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோடைக்கு குளுகுளு இளநீர் ஐஸ்க்ரீம்.! வீட்டிலேயே செய்து அசத்துங்க.!

கோடைக்கு குளுகுளு இளநீர் ஐஸ்க்ரீம்.! வீட்டிலேயே செய்து அசத்துங்க.!

இளநீர் ஐஸ்கிரீம்

இளநீர் ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் செய்ய தேங்காய் துருவிய அதே கொட்டாங்குச்சியில் ஐஸ்க்ரீம் வைத்து பரிமாறலாம். அட, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பார்ப்பதற்கு எவ்வளவு அழகாகவும், இயற்கையானதாகவும் இது காட்சியளிக்கும் என்பதை.

 • Last Updated :
 • Tamil Nadu, India

இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், கரும்பு ஜூஸ், மோர் போன்ற வார்த்தைகள் நம் காதில் விழாமலும், அவற்றை நாம் ருசி பார்க்காமலும் கோடை காலத்தை நாம் கடந்து செல்ல இயலாது. இயற்கையாக விளைகின்ற இவையெல்லாம் நம் உடலுக்கு நீர்ச்சத்து வழங்குவதோடு, ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதே சமயம், கார்பனேட் சோடா பானங்கள், ஐஸ்க்ரீம் போன்றவற்றின் மீதும் நம் மனம் அலைபாய்வதை தடுக்க இயலாது. இருப்பினும், இளநீரை கொண்டே ஐஸ்க்ரீம் தயாரித்து விட்டால்? ஆம், உண்மைதான் இளநீர் கொண்டு ஐஸ்க்ரீம் தயாரிக்கலாம்.

இளநீரின் வழு (இளம் தேங்காய்), தண்ணீர் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை கொண்டு ஐஸ்க்ரீம் தயாரிக்கலாம். நீங்கள் தேங்காய் துருவிய அதே கொட்டாங்குச்சியில் ஐஸ்க்ரீம் வைத்து பரிமாறலாம். அட, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பார்ப்பதற்கு எவ்வளவு அழகாகவும், இயற்கையானதாகவும் இது காட்சியளிக்கும் என்பதை. சரி இப்போது செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இளநீர் வழு இரண்டு கப் அளவு, ஒரு கப் அளவு இளநீர், ஒரு கப் விப்பிங் க்ரீம், ஒரு கப் தேங்காய் பால், கால் கப் அளவு தேங்காய் துருவல் மற்றும் ஒரு கப் சுண்டிய பால் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

Tender Coconut Ice-cream - I Scream You Scream We All Scream for Ice cream | Cooking with kids,Snacks and sweets,Party Ideas,Cool Foods for Warm Days,What's Cooking? | Blog Post by Poornima Sajjan |

செய்முறை :

 • முதலில் தேங்காய் பால், இளநீர், இளநீர் வழு ஆகிய அனைத்தையும் நைஸாக விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
 • அரைத்த தேங்காய் விழுது மற்றும் க்ரீம் ஆகியவற்றை கலக்கவும். இப்போது ஹெவி க்ரீமை கலந்து நன்றாக பொங்கி வரும்படி அடிக்கவும்.
 • இந்தக் கலவையுடன் சுண்டிய பால் சேர்க்கவும். பிறகு மீண்டும் ஒருமுறை அனைத்தும் கலக்கும்படி நன்றாக கிளறி விடவும். இப்போது தேங்காய் துருவலை போட்டு கிளறவும்.
 • ஐஸ்க்ரீம் பேஸ்-க்கான பொருள் தயார் ஆகிவிட்டது. இது மிக அடர்த்தியாகவும், மென்மையாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
 • இப்போது ஐஸ் க்ரீம் பேஸ் எடுத்து ஃபீரிசரில் வைக்கவும். இதில் சுமார் 4 முதல் 5 மணி நேரத்திற்கு ஃப்ரீஸ் செய்யவும்.
 • முழுமையாக ஃப்ரீஸ் ஆன பிறகு, வெளியே எடுக்கவும். உங்களுக்கான இளநீர் ஐஸ்க்ரீம் தயார் ஆகி விட்டது. ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தேங்காய் சிரட்டைகளில் இந்த ஐஸ்க்ரீம் நிரப்பி அனைவருக்கும் பரிமாறவும்.
top videos

  சுவை கூடுதலாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினால் ஐஸ்க்ரீமின் டாப் லேயரில் நுணுக்கிய நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். ஐஸ்க்ரீம் விரும்பக் கூடிய குழந்தைகளுக்கு இது நல்ல தேர்வாக அமையும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் இதை கொடுத்து அசத்தலாம்.

  First published:

  Tags: Coconut, Ice cream, Summer Food