முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொண்டை கடலை தேங்காய் பால் கிரேவி.. மதிய உணவுக்கு அசத்தல் விருந்து..!

கொண்டை கடலை தேங்காய் பால் கிரேவி.. மதிய உணவுக்கு அசத்தல் விருந்து..!

கொண்டை கடலை தேங்காய் பால் கிரேவி

கொண்டை கடலை தேங்காய் பால் கிரேவி

இதை சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் சாப்பிடலாம். தேங்காய் பால் சேர்ப்பதால் இதன் சுவை தனித்துவமாக இருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கொண்டைக்கடலை தேங்காய்பால் கிரேவி எளிமையான முறையில் சமைக்கப்படும் அருமையான உணவாகும். இதை சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் சாப்பிடலாம். தேங்காய் பால் சேர்ப்பதால் இதன் சுவை தனித்துவமாக இருக்கும். எனவே நீங்களும் ஒரு நாள் டிரை பண்ணி சாப்பிட்டுப் பாருங்கள். சுவை உங்கள் நாவை விட்டு நீங்காது.

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை

வெங்காயம் - 1

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 4

தக்காளி கரைத்தது - 1/2 கப்

தேங்காய் பால் - 1/4 கப்

மஞ்சள் பொடி - 1/2 tsp

மிளகாய் தூள் - 1 tsp

சீரகத்தூள் - 1 tsp

தனியா தூள் - 1 tsp

கரம் மசாலா - 1 tsp

சாட் மசாலா - 1 tsp

நெய் - 1 tsp

உப்பு - தே.அ

செய்முறை :

கொண்டைக் கடலையை இரவு தூங்கும் முன் ஊற வைத்துவிடுங்கள். பின் மறுநாள் காலை அதை குக்கரில் போட்டு உப்பு கொஞ்சம் சேர்த்து 5 விசில் வர வேக வையுங்கள்.

பின் தேங்காயிலிருந்து பால் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேங்காய் பால் சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு கொடுக்கப்பட்டுள்ள பொடிகளையும் சேர்த்து வதக்குங்கள்.

உப்பு தே.அ சேருங்கள். அடுத்ததாக வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு மூடி , சிறு தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

top videos

    இறுதியாக தண்ணீர் வற்றி கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவுங்கள். அவ்வளவுதான் கொண்டைக்கடலை தேங்காய் பால் கிரேவி தயார்.

    First published:

    Tags: Food recipes