முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கசப்பே தெரியாத அளவிற்கு பாகற்காய் குழம்பு செய்ய தெரியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி..

கசப்பே தெரியாத அளவிற்கு பாகற்காய் குழம்பு செய்ய தெரியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி..

பாகற்காய் குழம்பு

பாகற்காய் குழம்பு

பொதுவாக உடலுக்கு நல்லது செய்யும் எந்த உணவும் கசப்பாகவே இருக்கும். அது மாத்திரையாக இருந்தாலும் சரி.. பாகற்காயாய் இருந்தாலும் சரி.. ஆனால் இப்படி பாகற்காயில் குழம்பு செய்து பாருங்கள் அதன் கசப்பே தெரியாது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகற்காய் என்றாலே கசப்பு தரும் காய் என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் அதன் எண்ணற்ற நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் இயற்கை மருந்து எனலாம். பொதுவாக உடலுக்கு நல்லது செய்யும் எந்த உணவும் கசப்பாகவே இருக்கும். அது மாத்திரையாக இருந்தாலும் சரி.. பாகற்காயாய் இருந்தாலும் சரி.. ஆனால் இப்படி பாகற்காயில் குழம்பு செய்து பாருங்கள் அதன் கசப்பே தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர்வீர்கள். ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் - 4 tbsp

பாகற்காய் - 300 கிராம்

கடுகு - 1/2 tsp

வெந்தையம் - 1/2 tsp

உளுத்தம் பருப்பு - 1/2 tsp

சீரகம் - 1/2 tsp

மிளகு - 1/4 tsp

பூண்டு - 4

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

தக்காளி - 2

தனியா பொடி - 1 tsp

மிளகாய் தூள் - 1 tsp

மஞ்சள் பொடி - 1/4 tsp

குழம்பு மிளகாய் தூள் - 2 tbsp

புளி - எலுமிச்சை அளவு

உப்பு - தே.அ

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

வானலியில் எண்ணெய் விட்டு வட்டமாக நறுக்கிய பாகற்காய்களை போட்டு சிவக்க வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதே எண்ணெயில் கடுகு , வெந்தையம், சீரகம், மிளகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

தக்காளியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் அனைத்து பொடிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக புளிக்கரைசல் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்து சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.

சரியாக இருப்பின் தட்டு போட்டு மூடி 2 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் பாகற்காய்களை சேர்த்து கிளறுங்கள்.

பின் மீண்டும் தட்டுபோட்டு மூடி தண்ணீர் கொஞ்சம் கொரேவி பதம் வரும் வரை கொதிக்க விடுங்கள்.

தேவையான குழம்பு பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவுங்கள்.

top videos

    அவ்வளவுதான் பாகற்காய் புளிக்குழம்பு தயார்.

    First published:

    Tags: Bitter gourd, Food recipes