முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கசப்பே இல்லாத மொறு மொறு பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி?

கசப்பே இல்லாத மொறு மொறு பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி?

பாவற்காய் சிப்ஸ்

பாவற்காய் சிப்ஸ்

bitter gourd fry chips | பாகற்காய் சிப்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது...

  • Last Updated :

நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால் பாகற்காயில் பலவிதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று பாகற்காயை வைத்து சூப்பரான மொறுமொறுப்பான சிப்ஸ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

பெரிய பாகற்காய்-4

பெருங்காயத்தூள்- சிறிதளவு

நசுக்கிய பூண்டு-ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை மாவு-5 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு-2 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள்-2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள்- சிறிதளவு

தயிர்-2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயின் கசப்பை போக்க வட்டவட்டமாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 15 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டி வைக்க வேண்டும்.

Also see... மட்டன் - முருங்கைக்காய் குழம்பு... வடித்த சாதத்திற்கு அசத்தலாக இருக்கும்...!

top videos

    பிறகு வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசைந்து வைக்க வேண்டும். அதன் பிறகு கடாயில் எண்ணெயைக் காய வைத்து, பாகற்காயைப் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெடி.

    First published:

    Tags: Bitter gourd