முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இளநரை தீரும்.. விளாம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

இளநரை தீரும்.. விளாம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

விளாம்பழம்

விளாம்பழம்

vilampazham | விளாம் மரத்தின் வேர், இலை, காய், பிசின், பழம் போன்றவை மருத்துவக் குணங்கள் நிறைந்தவையே... சற்று புளிப்பும் இனிப்பும் கலந்த இந்த பழம் பித்தப்பை பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இனிப்புடன் புளிப்பு கலந்த சுவை கொண்ட பழமே விளாம்பழம் ஆகும். இந்த பழம் வெளிர் பச்சை நிற தடித்த ஓட்டினுள் இருக்கும். இப்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் 'ஏ' சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை,  இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டு பண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதிக்கு விளாம்பழம் நல்ல மருந்து.

தமிழர்களின் பண்பாடு கலாச்சாரங்களில் அன்று முதல் இன்றுவரை மிக முக்கியமான பழம் விளாம்பழம் ஆகும். அதிலும், சித்த மற்றும்  ஆயுர்வேத வைத்தியத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது. நாம் தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எந்த விதமான  வியாதிகளும் நம்மை அண்டாது.

Also see... சம்மருக்கு இந்த 6 கீரைகளில் தினசரி ஒன்றை சாப்பிட்டு வந்தால் போதும்... உடல் சூட்டை தணிக்கலாம்..!

விளாம்பழத்தின் இதர நன்மைகள் 

1.விளாம்பழம் ரத்த விருத்திக்கு உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

2. தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம் மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

3. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளாம் மரத்தின் பிசினை அடிக்கடி சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் தீரும்.

4. உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சி என  இரண்டிற்குமே விளாம்பழம் மிகவும் நல்லது.

5. தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், குடல் அல்சர் நன்கு குணமடையும். மேலும் வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசைந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் நரம்புத் தளர்ச்சி குணமடையும்.

Also see... இருமல், சளி தொல்லையை போக்கணுமா? இந்த துவையலை தினமும் சாப்பிடுங்க..!

6. விளாம் மரப்பட்டையைப் நன்கு பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தது கசாயம் ஆக்கி வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.

7. பனங்கற்கண்டுடன் விளாம்பழத்தை சாப்பிட, பித்தக் கோளாறுகளால் உண்டாகும் வாந்தி, தலைச் சுற்றல் தீரும்.

8.இந்த விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். விநாயகருக்கு மிக விருப்பமான பழம் என்பதால் விநாயக சதுர்த்திக்கு படைப்பது வழக்கம்.

First published:

Tags: Corona spread, Fruits, Immunity