முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சுவையோடு ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுமா?  பீட்ரூட் இட்லியை டிரை பண்ணிப்பாருங்க!

சுவையோடு ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுமா?  பீட்ரூட் இட்லியை டிரை பண்ணிப்பாருங்க!

பீட்ரூட் இட்லி

பீட்ரூட் இட்லி

நமக்கு அதிக சுவையோடு, ஆரோக்கியத்தையும் அளிக்கும் பீட்ரூட் இட்லி எப்படி செய்யலாம்? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலர் எந்த ஹோட்டல்களுக்குச் சென்றாலும் என்னென்ன மெனு இருக்கிறது? என ஆர்வத்தோடு கேட்போம்… ஆனால் இறுதியில் இரண்டு இட்லி கொடுங்கள், அப்புறம் சொல்கிறோம் என்று கூறுவோம். அந்தளவிற்கு இட்லியையும் நம்மையும் நிச்சயம் பிரிக்க முடியாது. அதிலும் தென்னிந்திய மக்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் இட்லிக்கு என தனி இடமே உண்டு.

இவ்வாறு மக்களிடம் தனித்துவம் பிடித்த இட்லியை எப்போதும் போல அடிக்கடி சாப்பிட்டாலும் சலித்துவிடுவோம். இதனால் தான் இட்லி ப்ரை, மினி இட்லி, சாம்பார் இட்லி, பொடி இட்லி, தக்காளி இட்லி, இட்லி மஞ்சூரியன், ராகி இட்லி என விதவிதமாக நாம் செய்து சாப்பிடுகிறோம். இந்த வரிசையில் நமக்கு அதிக சுவையோடு, ஆரோக்கியத்தையும் அளிக்கும் பீட்ரூட் இட்லி எப்படி செய்யலாம்? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் இட்லி செய்முறை:

தேவையான பொருள்கள் : 

  • லேசாக வறுத்த ரவை- 1 கப்
  • தயிர் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • பீட்ரூட் ( அரைத்தது) – அரை கப்
  • இஞ்சி – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 1
  • முந்திரி பருப்பு- சிறிதளவு
  • உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

  • முதலில், பீட்ரூட்டை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி பருப்பு, சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைக்க வேண்டும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் லேசாக வறுத்த ரவை, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் சேர்த்து மாவு பதத்திற்கு நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தப்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். தற்போது பீட்ரூட் இட்லி செய்வதற்கான மாவு ரெடியாகிவிட்டது.
  • இறுதியில் இட்லி சட்டி அல்லது இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி வைத்து காய்ந்ததும், மாவை இட்லி அச்சுகளில் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தால் போதும். சுவையாக பீட்ரூட் இட்லி ரெடியாகிவிடும்.
  • Also Read | சமையலில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டதா..?  சமையலை ருசியாக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.!

top videos

    மற்ற இட்லிகளைப் போன்று இல்லாமல் லேசான பிங்க் நிறத்தில் கிடைப்பதால் நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இதோடு மட்டுமின்றி பீட்ரூட்டில் இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளதால் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பதோடு, பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பீட்ரூட் உதவியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Beetroot, Breakfast, Idli