முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காலை உணவை ஹெல்தியாக்கும் அவல் தோசை செய்வது எப்படி..?

காலை உணவை ஹெல்தியாக்கும் அவல் தோசை செய்வது எப்படி..?

அவல் தோசை

அவல் தோசை

Aval Dosai | அவலை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிடலாம். அவலை பால் மற்றும் வெல்லம் சேர்த்தோ, வெல்லம் மற்றும் நெய்யுடன் சேர்த்தே சாப்பிடுவது குழந்தைகளுக்கு நல்ல சத்துணவாக இருக்கும். அத்துடன் சுகர் உள்ளவர்களுக்கும் நல்ல காலை உணவாக இந்த அவல் தோசை இருக்கும். இதோ அதற்கான ரெசிபி...

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் அவல் நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. வெள்ளை அவல் மற்றும் சிவப்பு அவல் என 2 நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. இதன் நிறம் அரிசியின் நிறத்தை சார்ந்தது. வளரும் குழந்தைகளுக்கு அவல் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருள். அவலைப் பால் அல்லது தண்ணீரில் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம்.

அவல் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவாகும். உடலி சூட்டைத் தணிக்கும். செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும். இந்த அவலில் நாம் தோசை செய்து சாப்பிடுவதன் மூலம் உடலில் எடையும் குறைய ஆரம்பிக்கும். சுகர் உள்ளவர்களுக்கும் நல்ல உணவாக இருக்கும். அவல் தோசையை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கெட்டி அவல்- 1 கப்

புளித்த மோர்- 1கப்

பச்சை மிளகாய்- 2

உப்பு- தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் அவலை நன்றாக கழுவி, 20 நிமிடங்கள் வரை மோரில் ஊற வைக்க வேண்டும். அதனை தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அவலை அரைக்கவும்.

2. தொடர்ந்து அதில் உப்பு பெருங்காயத்தூள் சேர்க்கவும். மேலும் இந்த மாவில் பச்சை மிளகாய் பொடியாக அரிந்து சேர்க்கவும்.

top videos

    3. மேலும் இதை தோசை மாவு பதத்திற்கு கரைத்து மெல்லிய தோசைகளாக எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். ஒரு வேளை புளித்த மோர் இல்லை என்றால், மோரில் எலுமிச்சை கலந்துகொள்ளலாம்.

    First published:

    Tags: Food, Sugar