முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / விஜயநகர் சந்தையை சுற்றி கம கமக்கும் பஜ்ஜிகள்... அப்படி என்ன ஸ்பெஷல்..!

விஜயநகர் சந்தையை சுற்றி கம கமக்கும் பஜ்ஜிகள்... அப்படி என்ன ஸ்பெஷல்..!

விஜயநகர் சந்தை - பஜ்ஜிகள்

விஜயநகர் சந்தை - பஜ்ஜிகள்

Ramzan Special Snacks | உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு 29 முதல் 30 நாட்கள் வரை விரதம் இருந்து வருகின்றனர். விரதத்தின் இறுதியில் பிரார்த்தனைகளுடனும் மிகப் பெரும் கொண்டாட்டங்களுடன் ரம்ஜான் பண்டிகையை அவர்கள் நிறைவு செய்வார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Karnataka, India

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு 29 முதல் 30 நாட்கள் வரை விரதம் இருந்து வருகின்றனர். விரதத்தின் இறுதியில் பிரார்த்தனைகளுடனும் மிகப்பெரும் கொண்டாட்டங்களுடனும் ரம்ஜான் பண்டிகையை அவர்கள் நிறைவு செய்வார்கள்.

புனித குரான் ஆனது முகமது நபிக்கு இந்த புனிதமான மாதத்தில் தான் வெளிப்படுத்தப்பட்டதாக இஸ்லாமியர்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலை முதல் மாலை வேலை வரை நோன்பு கடைப்பிடிப்பார்கள்.

கிட்டத்தட்ட விரத நாட்கள் முடிவடையும் நேரம் நெருங்கி விட்ட வேலையில் அனைவரும் புனித ரம்ஜானை கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றனர். தினசரி சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை எந்த வித உணவும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருந்து மாலை விரதத்தை முடித்த பிறகு உணவை உட்கொள்வார்கள். இவர்களுக்காகவே மாலை வேளைகளில் வித விதமான உணவு பொருட்கள் சந்தைகளில் தயார் செய்து விற்கப்பட்டு வருகின்றன.

Also see... “சாப்பாடு ருசியா இல்ல...” - மகள் கண் முன்னே மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்... அதிர்ச்சி சம்பவம்...!

கர்நாடக மாநிலத்தின் உப்பிலியில் உள்ள விகாஷ் நகரில் உள்ள சந்தையில் நாவில் எச்சில் ஊற வைக்கும் பல்வேறு வித தின்பண்டங்கள் தயார் செய்து விற்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த இடம் முழுவதுமே வறுத்த பஜ்ஜிக்களின் வாசனையால் நிரம்பி இருக்கும். இதை தவிர வேறு பலவிதமான உணவுப் பொருட்களையும் நம்மால் இந்த சந்தையில் சுவைக்க முடியும்.

பக்கோடாக்கள், சமோசாக்கள், சிக்கன் மஞ்சூரியன், ட்ரை சிக்கன், மட்டன் கீமா, வடை, லஸ்ஸி போன்ற அனைத்து விதமான உணவுப் பொருட்களும் இங்கு கிடைக்கும். காலை ஐந்து மணியில் இருந்து மாலை வரை விரதம் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் மாலை நேரங்களில் இங்கு குழுமி தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை உட்கொள்கின்றனர்.

Also see... ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு பிடித்தமான கமர்புகூர் ஸ்பெஷல் ஜிலேபி பற்றி தெரியுமா?

மேலும் இஃப்தார் சிறப்பு உணவு வகைகளை பற்றியும், சிறப்பு வாய்ந்த உணவுகள் கிடைக்கும் இடங்களை பற்றியும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக டெல்லியில் உள்ள நவாப் குரேஷி ஸ்டாலில் கிடைக்கும் மொஹாபத் கா சர்பத்தின் சுவையை வார்த்தையினால் விவரிக்க இயலாது.

மேலும் கோடை காலத்தினால் நாடெங்கும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இது உடலின் வெப்பத்தை குறைக்க உதவுவதுடன் நாவிற்கும் அதீத சுவையை அளிப்பதால் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானமாக இருந்து வருகிறது. மேலும் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பதற்கும் இது உதவுகிறது.

இதைத் தவிர விஜயநகர் சந்தையில் ஸ்ட்ராபெரி மற்றும் தர்பூசணி பழத்தை பயன்படுத்தி இந்த சர்பத்தானது விற்பனை செய்யப்படுகிறது. சிலர் மாம்பழத்தின் ஃப்ளேவரையும் அதிகம் விரும்புகின்றனர். நோன்பானது ஏப்ரல் 21-ஆம் தேதி முடிவடையும் நிலையில் ஏப்ரல் 22ஆம் தேதி உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜானை விமரிசையாக கொண்டாட இருக்கிறார்கள்.

top videos

    இந்த சமயத்தில் அனைவரும் தங்களுக்குள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்த சீர் குருமா எனப்படும் பால் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு பானத்தை அருந்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Ramzan, Snacks