முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆவி பறக்க பறக்க அரிசி மாவு புட்டு... எளிமையாக செய்வது எப்படி..?

ஆவி பறக்க பறக்க அரிசி மாவு புட்டு... எளிமையாக செய்வது எப்படி..?

புட்டு

புட்டு

Puttu Recipe | கேரளாவின் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்று புட்டு. இதை வழக்கமாக வாழைப்பழம், அப்பளம் அல்லது கடலை கறியுடன் சாப்பிடுவார்கள். வீட்டில் அரைத்த அரிசி மாவுடன் செய்யப்படும் புட்டு மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதில் புட்டு மட்டும் ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு, சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என அதன் வகைகள் ஏராளம். இன்னிக்கு அரிசி புட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்...

தேவையான பொருட்கள் :

  • அரிசி மாவு – 4-5 கப்
  • தேங்காய் துருவியது – 2-3 கப் ()
  • தண்ணீர் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

top videos

    செய்முறை :

    முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
    பின்னர் மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டுக்கு ஏற்றவாறு கலந்து கொள்ளவும். (முக்கியமாக தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். (அதற்காக மிகுந்த வறட்சியுடனும் இருக்கக் கூடாது.)
    பின்னர் அந்த புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1- 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். பின்னர் புட்டு பாத்திரத்தில் நீளமாக இருக்கும் குழாயில், முதலில் புட்டு மாவு சிறிது போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு மூடவும்.
    பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 5-6 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறலாம்...
    First published:

    Tags: Breakfast, Puttu Recipe in Tamil