முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காரசாரமான ஆந்திரா ஸ்டைல் இறால் வறுவல் செய்யலாமா?

காரசாரமான ஆந்திரா ஸ்டைல் இறால் வறுவல் செய்யலாமா?

ஆந்திரா ஸ்பெஷல் இறால் வறுவல்

ஆந்திரா ஸ்பெஷல் இறால் வறுவல்

இறாலை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. உங்க வீட்டுல இருக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக கடல் உணவுகள் என்றாலே நம்மில் பலரின் விருப்பப்பட்ட உணவாக இருக்கும். ஏனென்றால், அவை சுவைக்கு மட்டும் அல்ல, அதிக சத்துக்களையும் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக இறால் என்றால் நம்மில் பாருக்கு நாவில் எச்சில் ஊரும்.

மற்ற கடல் உணவுகளை போல இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அந்தவகையில், ஆந்திரா மாநில மக்கள் விரும்பி சாப்பிடும் சுவையான இறால் வறுவலை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இறால் - 500 கிலோ.

வெங்காயம் - 2.

பூண்டு பல் - 6.

இஞ்சி - 2 இன்ச் அளவு.

பச்சை மிளகாய் - 3.

தேங்காய் (துருவியது) - 2 ஸ்பூன்.

மஞ்சள் - 1/4 ஸ்பூன்.

கொத்தமல்லி பொடி - 1/4 ஸ்பூன்.

கஸ்தூரி மேத்தி - 1/2 ஸ்பூன்.

கரம் மசாலா - 1/2 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்.

எலுமிச்சை சாறு அல்லது தயிர் - 1 டீஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

கறிவேப்பிலை - 20 தழைகள்.

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் வறுவல் செய்ய எடுத்துக்கொண்ட இறாலினை நரம்பு நீக்கி, மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து சுத்தம் செய்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதனிடையே இஞ்சி மற்றும் பச்சை மிளகாயினை ஒரு மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

Also Read | கொளுத்தும் வெயிலுக்கு இதமான பாதாம் பால் சர்பத்… எப்படி செய்வது?

ஒரு சிறிய பாத்திரத்தில் இந்த இறாலுடன், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு / தயிர் சேர்த்து கலந்தது 10 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.

10 நிமிடத்திற்கு பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீருடன் இந்த இறால் சேர்மத்தை சேர்த்து 4 முதல் 6 நிமிடம் நன்கு வேக வைத்து, பின் அடுப்பில் இருந்து இறக்கி தனியே எடுத்து வைக்கவும்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் வெங்காயம் (நறுக்கியது), கறிவேப்பிலை, கஸ்தூரி மேத்தி சேர்த்து தாளிக்கவும்.

தொடர்ந்து வேக வைத்த இறால் மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடத்திற்கு வேக வைக்கவும். பின்னர், இதனுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி பொடி, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடத்திற்கு வதக்கவும்.

உப்பை சரிபார்த்து இறுதியாக இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து 3 நிமிடங்களுக்கு மிகாமல் வதக்கி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான இறால் வறுவல் தயார்!.

First published:

Tags: Food, Food recipes, Prawn Recipes