நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, தொற்றுகளை கட்டுப்படுத்த மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது வைட்டமின் சி. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்க்கான நம் உடலின் அன்றாடத் தேவையை இயற்கையாக எப்படிப் பூர்த்தி செய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
வைட்டமின் சி என்றதுமே நம் நினைவுக்கு வருவது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தான். இருப்பினும் நம்முடைய இந்த பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக அதாவது ஆரஞ்சு அல்லது எலுமிச்சைக்கு பதிலாக நெல்லிக்காயும் கூட நம்முடைய அன்றாட வைட்டமின் சி தேவைகளை பூர்த்தி செய்கிறது. இதுபற்றி பிரபல டயட்டீஷியன் Mac Singh தன்னுடைய இன்ஸ்டாவில் கூறியிருக்கிறார். இன்ஸ்டாவில் இவர் கூறியிருப்பதாவது, ஆராய்ச்சிகளின் படி, 100 கிராம் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே அளவு அதாவது 53 மிகி வைட்டமின் சி உள்ளது.
ஆனால் 100 கிராம் அளவு நெல்லிக்காயில் சுமார் 450 மிகி வைட்டமின் சி அடங்கியுள்ளது. பெண்கள் ஒரு நாளைக்கு 75 மில்லி கிராம் மற்றும் ஆண்கள் ஒரு நாளைக்கு 90 மில்லி கிராம் வைட்டமின் சி எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தினசரி அளவை இயற்கையாகவே பூர்த்தி செய்ய நாள்தோறும் சிறிதளவு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதுமானது என்கிறார் Mac Singh. மேலும் நெல்லிக்காயில் கலோரிகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்டவை குறைவாக உள்ளது. நெல்லிக்காயில் காணப்படும் பிற முக்கிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கரோட்டின், வைட்டமின் பி, ஈ மற்றும் ஏ உள்ளிட்டவை அடங்கும்! என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே மூத்த உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சமீனா அன்சாரி பேசுகையில், வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக இருக்கிறது நெல்லிக்காய். இது உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும். ஒரு பெரிய Amla fruit-ல் 600 மிகி வைட்டமின் சி உள்ளது, இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலை விட அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, ரத்த சர்க்கரை அளவை சீராக்குவது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை நெல்லி கொண்டுள்ளது.
நெல்லிக்காயின் பல ஆரோக்கிய நன்மைகளை பற்றி பகிர்ந்துள்ளார் பிரபல மருத்துவர் Rutu Dhodapkar.
View this post on Instagram
நெல்லிக்காயை டயட்டில் எப்படி சேர்ப்பது?
நெல்லிக்காயை ஜூஸ், ட்ரைட் பவுடர், சட்னி போன்ற பல வடிவங்களில் உட்கொள்ளலாம். அதே நேரம் உணவாக தயார் செய்யும் போது ஊட்டச்சத்து மதிப்புகள் குறைய கூடும் என்பதால் நெல்லிக்காயை பச்சையாக சாப்பிட Mac Singh பரிந்துரைக்கிறார். நெல்லி ஊறுகாய், ஜூஸ் உட்கொள்ளலாம் என்றாலும், அம்லா முராப்பா மற்றும் மிட்டாய்களில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதால் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த நெல்லி சட்னி:
நெல்லி சட்னி ஆரோக்கியமானது ஒருநாளைக்கு 2 முறை உணவில் சேர்க்கலாம். ஃபிரிட்ஜில் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைத்தால் 2 நாட்களுக்கு உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள், எலும்பு அறுவை சிகிச்சை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் தொற்று உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்கிறார் நிபுணர் Dhodapkar.
தேவையான பொருட்கள்:
விதை நீக்கப்பட்ட நறுக்கிய நெல்லிக்காய் - 100 கிராம்
கொத்தமல்லி - 50 கிராம்
புதினா - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
மேற்காணும் அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு மென்மையான பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
Also Read | உடல் எடையை மளமளவென குறைக்க நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க.!
நெல்லியை உட்கொள்வது பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், Dhodapkar-ன் கூற்றுப்படி இதை டயட்டில் சேர்க்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amla, Gooseberry, Vitamin C