முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஜில்ஜில் கூல்கூல்..! வெப்பத்தை தணிக்க உதவும் குளுகுளு ஜல்ஜீரா..!

ஜில்ஜில் கூல்கூல்..! வெப்பத்தை தணிக்க உதவும் குளுகுளு ஜல்ஜீரா..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஜல்ஜிராவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்குவதற்கு அதிகம் பருகுகின்றனர். இதனால் உடலில் ஏற்படும் அமிலத்தன்மை குறைவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை காலம் வந்து விட்டாலே உடல் வெப்பத்தை தணிக்க உதவும் குளிர்பானங்களின் தேவையும் அதிகரித்து விடும். லஸ்ஸி, சர்பத் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழச்சாறுகள் ஆகியவற்றை மக்கள் பெரும் அளவில் விரும்பி உட்கொள்வார்கள். இவை அனைத்துமே பொதுவாக கோடை காலங்களில் எளிதாக கிடைக்கும் ஒன்றுதான். ஆனால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய, மிகவும் ஆரோக்கியமான ஜல்ஜீரா பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

ஜல்ஜீரா என்பது இந்தியாவில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் ஒரு பானம் ஆகும். கொத்தமல்லி, புதினா, சீரகம் இவற்றுடன் வேறு சில மசாலாக்களையும் சேர்த்து மிகவும் சுவையாக இந்த பானம் தயாரிக்கப்படும். இதனை குடிப்பதால் உடல் வெப்பநிலையை தணிக்க உதவுவதோடு உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவி செய்கிறது. இதைத் தவிர உடலில் ஏற்படும் வாயு கோளாறுகளை சரி செய்யவும் செரிமானத்தை ஊக்குவிக்கவும் இந்த பானம் உதவுகிறது.

Read More : சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாதாம்.. ஆய்வில் வெளியான நல்ல செய்தி..!

சிலர் இந்த ஜல்ஜிராவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்குவதற்கு அதிகம் பருகுகின்றனர். இதனால் உடலில் ஏற்படும் அமிலத்தன்மை குறைவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

top videos

    இவ்வாறு அனைவருக்கும் பிடித்த ஜல்ஜீராவினை நாம் குடிப்பதால் என்னென்ன விதமான நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

    செரிமானத்தை ஊக்குவிக்க கூடிய என்சைம்கள் அதிக அளவில் சுரப்பதற்கு உதவி செய்கிறது.ஜல் ஜீரோ நமது தாகத்தை தனித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்தோடு வைத்திருக்க உதவுகிறது.
    இதில் உள்ள ஜீரா மற்றும் புதினா ஆகியவை நமது உடலில் உள்ள இரும்புச் சத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் நமது உடல் புத்துணர்ச்சியோடு இருப்பது மட்டுமல்லாமல் உடலில் உள்ள செல்கள் அனைத்திற்கும் ஆக்சிஜன் அதிக அளவில் கடத்தப்படுகிறது.
    ஜல்ஜீராவை போலவே கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியுடன் வைக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உதவும் மற்றொரு பானம் சோற்றுக்கற்றாழை ஜூஸ் ஆகும். இந்த சோற்றுக்கற்றாழை ஜூஸ் பெருமளவில் நமது குடல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
    இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவை நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கின்றன. மேலும் சோற்றுக்கற்றாழை ஜூஸை நாம் குடிப்பதினால் உணவு செரிமானம் ஆவதற்கும் அதிகம் உதவுகிறது. இது நமது உணவில் உள்ள நீர் சத்தானது குடலினால் பெருமளவில் கிரகிக்கப்படுவதை தடுக்கிறது.
    இதன் மூலம்மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உருவாகாமல் தடுக்கிறது. எனவே பெரும்பாலான செரிமான பிரச்சனைகளை நீங்கள் சோற்றுகற்றாழை ஜூஸ் பருகுவதன் மூலமே சரிப்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
    First published:

    Tags: Health, Summer, Summer Heat, Summer tips