கோடை வெயில் நம்மை வாட்டி வதைத்து அதன் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பொதுவாக கோடை காலத்தில் தர்பூசணிப் பழம், பலாப்பழம், முந்திரிப்பழம், மாங்காய், மாம்பழம் போன்ற பருவ கால பழங்கள் நமக்கு எளிதில் கிடைக்கின்றன. மாம்பழங்களை வைத்து ஜுஸ், மில்க் ஷேக் என்று வித விதமாக செய்து அசத்தலாம். பழுக்காத மாங்காய்களையும் வைத்து சுவையான மேங்கோ ட்ரின்க் செய்யலாம். அதன் சுவை தனித்துவமாக இருக்கும்.
மேங்கோ டிரின்கின் நன்மைகள்:
உடல் எடையை குறைக்க மேங்கோ ட்ரின்க் எவ்வாறு உதவுகிறது?
கோடை வெயிலை பலரரும் பல விதங்களில் எதிர் கொள்வது வழக்கம். அந்த வகையில், ஒரு சிலர் செய்யும் சுவையான புத்துணர்ச்சி ஊட்டும் ஒரு பானம் தான் மேங்கோ ட்ரின்க். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆதலால், இது உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், அதிக சர்க்கரை சேர்ப்பதே இதில் உள்ள ஒரு பிரச்சனை ஆகும். மாங்காய் புளிப்பாக இருப்பதால், அதனை சற்று கட்டுப்படுத்த சர்க்கரை சேர்க்கப்படுகிறது. ஆனால், உடல் எடையைக் குறைக்க நீங்கள் இதனை நீங்கள் பருகினால், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
மேங்கோ ட்ரின்கில் எத்தனை கேலரிகள் உள்ளன?
பொதுவாக நாம் சர்க்கரை சேர்த்து இதனை தயார் செய்தால், இதில் 100 கலோரிகள் (சற்றும் அதற்கு மேல் கூட இருக்கலாம்) இருக்கும். ஆனால், ஊட்டச்சத்து நிபுணர் ஆன நட்டாஷா மோகன் அவர்கள் நமக்கு ஒரு ஆரோக்கியமான செய்முறையை பகிர்ந்து உள்ளார். அதில் வெறும் 55 கலோரிகளே உள்ளன. அதனால், எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் இந்த சுவையான பானத்தை நம் உடல் எடை இழப்பிற்கும் தாராளமாக பயன்படுத்தலாம்.
Also Read | Summer Health Tips | கோடைக் கால நோய்களை விரட்டியடிக்கும் கை வைத்தியங்கள்...!
செய்முறை :
ஒரு மாங்காயை எடுத்து, குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனை 10-15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். வெந்த உடன், அதில் உள்ள தோல் மற்றும் கொட்டையை நீக்கி விட்டு, அதன் கூழை மிக்சியில் போடுங்கள். அதன் உடன் கொஞ்சம் புதினா இலைகளும் ஐஸ் கட்டியும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வெல்லம், ஜீரக தூள், மிளகுப் பொடி, கொஞ்சம் உப்பு சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான், இதனை பருகி தாகத்தையும் தணித்து கொள்ளலாம், உங்கள் உடல் எடையையும் குறைக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mango, Summer Food, Weight loss