முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Eid-ul-Fitr 2023 : சிக்கன் முதல் சர்பத் வரை.. ரம்ஜான் மதிய விருந்துக்கு அசத்தல் ரெசிபீஸ்..

Eid-ul-Fitr 2023 : சிக்கன் முதல் சர்பத் வரை.. ரம்ஜான் மதிய விருந்துக்கு அசத்தல் ரெசிபீஸ்..

ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபீஸ்

ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபீஸ்

நோன்புக்குப் பிறகு சுவையான இஃப்தார் உணவை புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இங்கே..

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரம்ஜான் பண்டிகை வருகின்ற சனிக்கிழமை கொண்டாடவுள்ளது. ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடுமையாக கடைப்பிடித்து வந்த நிலையில் இது இன்னும் ஒரு நாளில் முடிவடைகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துக்களை ஒருபுறம் பரிமாறிக்கொள்ளும் வேளையில், ரம்ஜான் தினத்தில் சிறப்பு விருந்துகளும் நிச்சயம் இடம் பெறும். நோன்புக்குப் பிறகு சுவையான இஃப்தார் உணவை புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இங்கே..

கிரிஸ்பி ஃபிரைடு சிக்கன்:

தேவையான பொருள்கள்:

  • சிக்கன் – 200 கிராம்
  • பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன்
  • கஸ்தூரி மேத்தி – 1 கிராம்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – தேவையான அளவு
  • முட்டை – 1
  • உப்பு – சுவைக்கு ஏற்ப
  • இஞ்சி பூண்டு விழுது,
  • மோர், அரிசி மாவு மற்றும் கடலை மாவு.

செய்முறை :

  • முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதனுள் சிறது மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் மேற்கூறியுள்ள அனைத்துப்பொருள்களையும் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.
  • .இதையடுத்து மசாலாவில் கோழியைச் சேர்த்து பிசைந்து இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் இதை பெரிய பாத்திரத்தில் எடுத்து சூடாக்கி கடலை மாவு,அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.
  • பின்னர் பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா சேர்த்த சிக்கனை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் போதும், சுவையான ப்ரை கிரிஸ்பி சிக்கன் ரெடி.
  • ஹல்டி மலாய் கி சுப்ஸி:

    இது நீங்கள் அதிகம் கேள்விப்பட்ட ஒரு உணவாக இருக்காது. ஆனால், க்ரீமியாக, சுவையாக இருக்கும்.

    தேவையான பொருள்கள் : 

    • நெய் - 5 கிராம்
    • எண்ணெய் – சிறிதளவு
    • மலாய் -20 கிராம்
    • போட்லி மசாலா - 5 கிராம்
    • கஸ்தூரி மேத்தி - 3 கிராம்
    • உப்பு சுவைக்கு ஏற்ப
    • வேகவைத்த நீண்ட பீன்ஸ், கேரட் - 10 கிராம்
    • நறுக்கிய வெங்காயம் -20 கிராம்
    • நறுக்கிய தக்காளி -15 கிராம்
    • நறுக்கிய பச்சை மிளகாய் -5 கிராம்
    • நறுக்கிய இஞ்சி -4 கிராம்
    • வேகவைத்த காலிஃபிளவர் -10 கிராம்
    • மொச்சைக்கொட்டை - 10 கிராம்
    • சீரகப் பொடி -3 கிராம்
    • மஞ்சள் மிளகாய் தூள் -3 கிராம்

    செய்முறை:

    • ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சில நொடிகள் சூடாக்கவும். இதையடுத்து சீரகத்தை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதையடுத்து தக்காளி மற்றும் பூண்டு சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் மிதமான தீயில் 10 நிமிடங்கள் சமைக்கவும்.
    • இப்போது மஞ்சள் சேர்த்து 10 நிமிடங்கள் சமைக்கவும். கசூரி மேத்தி மற்றும் பொட்லி மசாலாவைத் தொடர்ந்து மஞ்சள் மிளகாய் தூள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, பொருட்களை சிறிது நேரம் கொதிக்க விடவும்.
    • உங்கள் சுவைக்கு ஏற்ப அனைத்து காய்கறிகளையும் உப்பு சேர்த்து சேர்க்கவும். கடாயை ஒரு மூடியுடன் மூடி, காய்கறிகளை ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கொதிக்க விடவும்.. இப்போது மலாயைச் சேர்த்து, பொருட்களை சில நொடிகள் கிளறவும். இறுதியில் சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடங்கள் சமைத்தால் போதும் சுவையான டிஸ் ரெடி.
    • ஷர்பத் ரூஹ் அஃப்ஸா:

      ரமலான் காலத்தில் இஃப்தாருக்கான எளிதான மற்றும் சுவையான ரெசிபிகளில் இதுவும் ஒன்றாகும்.

      தேவையான பொருட்கள்:

      • தண்ணீர்
      • ஷர்பத்
      • பால்
      • ஏலக்காய்

      செய்முறை:

      • முதலில் 1 கப் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதனுள் 200 மில்லி பால், 1 ஏலக்காய் மற்றும் ஷர்பத் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். பின்னர் சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து, சில மணி நேரத்திற்குப் பிறகு உங்கள் விருப்பப்படி டிரை ப்ரூட்ஸ் சேர்த்து சாப்பிடலாம்.
      • 1 கப் தண்ணீர், 200 மில்லி பால், 1 எலைச்சி மற்றும் 100 மில்லி ரூஹ் அஃப்சா சிரப் ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் சேர்க்கவும். பொருட்கள் சிறிது நேரம் கலக்கட்டும். குளிரவைத்து பரிமாறவும் மற்றும் உங்கள் விருப்பப்படி உலர்ந்த பழங்கள் மற்றும் மேல்புறத்துடன் அலங்கரிக்கவும்.
      • கருப்பு சுண்டல் மசாலா:

        ரமலானுக்கு சத்தான சுலபமான கருப்பு சுண்டல் மசாலா சாட் ரெசிபி.

        தேவையான பொருட்கள்:

        • சுண்டல் – 80 கிராம்
        • சாட் மசாலா – 5 கிராம்
        • நறுக்கிய வெங்காயம் -30 கிராம்
        • எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
        • நறுக்கிய தக்காளி -30 கிராம்
        • கொத்துமல்லி தழை
        • பச்சை மிளகாய்

        செய்முறை:

        • முதலில் சுண்டலை வேகவைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
        • அவற்றை நன்றாக கலந்துக் கொண்டு இதனுள் கொத்தமல்லி இலைகள், எலுமிச்சை குடைமிளகாய் அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு ஏதேனும் மேல்புறத்துடன் ரெசிபியை அலங்கரித்து சாப்பிடலாம்.
        • மேலும் குளிரூட்டப்பட்ட பால், பாதாம், ஏலக்காய் தூள், பால் மற்றும் ஐஸ் சேர்த்து பாதாம் சர்பத் செய்து நீங்கள் இந்த ரமலானைக் கொண்டாடுங்கள்.
        • பாதாம் சர்பத் : 

          ரமலான் காலத்தில் இஃப்தாருக்கான புத்துணர்ச்சி அளிக்க கூடிய பானத்தில் இதுவும் ஒன்றாகும்.

          தேவையான பொருட்கள்:

          • பாதாம்
          • குளிர்ந்த பால்
          • ஏலக்காய் தூள்
          • கண்டென்ஸ்ட் மில்க்
          • நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டி

          செய்முறை : 

          • இதை செய்வத்ற்கு அரை மணி நேரம் முன்னதாக சிறிதளவு பாதாமை எடுத்து அதை சுடு நீரில் ஊற வைக்கவும்.
          • ஊற வைத்த பாதாமை தோல் உறித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
          • ஒரு பிளெண்டரில் நறுக்கிய பாதாம், ஐஸ், பால், கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு பிளென்ட் செய்யவும்.
          • பின்னர் ஒரு கிளாஸில் மாற்றி சிறிது நறுக்கிய பாதாமை மேலே தூவி அலங்கரித்து பறிமாறினால் சுவையான பாதாம் சர்பத் ரெடி.!
top videos

    First published:

    Tags: Food recipes, Ramzan, Recipe