முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 10 நிமிடத்தில் ராகி தோசை.. மொறு மொறுனு சுட ரெசிபி இதோ...

10 நிமிடத்தில் ராகி தோசை.. மொறு மொறுனு சுட ரெசிபி இதோ...

ராகி தோசை

ராகி தோசை

இரும்பு சத்தை அள்ளித் தரும் ஊட்டச்சத்து மிக்க உணவு என்பதால் இதை தயங்காமல் யார் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தானிய வகைகளில் கேழ்வரகு மாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இரும்பு சத்தை அள்ளித் தரும் ஊட்டச்சத்து மிக்க உணவு என்பதால் இதை தயங்காமல் யார் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். ராகி தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ராகி மாவு - 1 கப்

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 2 கொத்து

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தே.அ

பச்சை மிளகாஉ - 2

தண்ணீர் - 2 கப்

செய்முறை :

கிண்ணத்தில் 1 கப் ராகி மாவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போடவும்

காரத்திற்கு பச்சை மிளகாய் சேர்க்கவும். பின் கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.

உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டிகளின்றி நன்கு கரைத்துக்கொள்ளுங்கள்.

மாவு கெட்டியாக இல்லாமல் தண்ணீர் கொஞ்சம் அதிகம் சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள்.

இந்த மாவை 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி விடுங்கள்.

முடிந்தால் அரை மணி நேரம் வரை கூட விடலாம்.

பின் அதை ரவா தோசை ஊற்றுவது போல் எண்ணெய் தடவி மாவை வார்த்து எண்ணெய் ஊற்றி விடுங்கள்.

சிறுது நேரம் கழித்து எடுக்க மொறு மொறு தோசை தயாராகிவிடும்.

top videos

    இதை தினசரி காலை உணவுக்கு கூட செய்து சாப்பிடலாம்.

    First published:

    Tags: Dosa, Ragi