உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பிரபலமாக கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை ரமலான். ஈத்-உல்-பித்ர் கொண்டாட்டங்கள் இஸ்லாமிய நாட்காட்டியின் 10-வது மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. இது ஷவ்வா ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டு ஈத் ஏப்ரல் 22, சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும்.
திருமணம், ரம்ஜான், தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகையாக இருந்தாலும் கைகளில் மருதாணி வைக்காமல் எந்த ஒரு பண்டிகையும் முழுமையடையாது. ஏனென்றால், மருதாணி வைப்பது தற்போதைய காலகட்டத்தில் ஒரு காலாச்சாரமாகவே மாறிவிட்டது. அந்தவகையில், உங்கள் கைகளில் அழகான மருதாணி டிசைன்கள் இல்லாமல் எப்படி ரம்ஜான் பண்டிகை முழுமையடையும்?.
ரமலான் பண்டிகைக்கு உங்கள் கைகளை அலங்கரிக்க விரும்பினால், நாங்கள் உங்களுக்கான சில எளிமையான அரபு ஸ்டைல் மெஹந்தி டிசைன்கள் சிலவற்றை பரிந்துரைக்கிறோம். இந்த டிசைன்கள் உங்களை இன்னும் அழகாக்கும். இதோ உங்களுக்கான சில மெஹந்தி டிசைன்கள் :
View this post on Instagram
மெஹந்தி இயல்பாகவே அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவேதான், மருதாணி வைத்துக்கொள்ள அனைவரும் விரும்புகிறார்கள். உங்களுக்கு மலர்கள் மிகவும் பிடிக்கும் என்றால், இந்த டிசைன் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். இது உங்கள் கைகளை முழுமையாக மறைப்பதுடன், பாரம்பரிய தோற்றத்தையும் கொடுக்கும். இது உங்களையும், உங்கள் கைகளையும் ஒருபடி மேலே அழகாக்கும்.
View this post on Instagram
நீங்கள் மலர்களை விரும்புபவராக இருந்தால், இந்த மெஹந்தி டிசைன் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இது மிகவும் எளிமையான டிசைன், அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். வேலை அதிகமாக இருக்கிறது ஆனால், மருதாணி வைக்க ஆசை என்றால், இந்த டிசைனை தேர்வு செய்யலாம்.
Also Read | Eid-ul-Fitr 2023 : ரம்ஜான் விருந்தில் இடம் பெறும் உணவுகளின் ரெசிபீஸ்.. கண்டிப்பா டிரை பண்ணி பாருங்க..!
View this post on Instagram
இந்த டிசைன் உங்கள் கைகளுக்கு பாரம்பரியமான மற்றும் ஆடம்பரமான தோற்றத்தை கொடுக்கும். இது கைகளின் பின்புற பகுதியில் சங்கிலியில் மணி தொங்குவதை போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். இந்த மெஹந்தி டிசைன், உங்கள் கைகளில் எந்த விதமான நகைகள் அணியாமலேயே உங்களை அழகாக காட்டும். இது மற்றவர்களின் கவனத்தை எளிமையாக ஈர்க்கும்.
View this post on Instagram
நீங்கள் கச கசனு மெஹந்தி வைப்பதை விரும்பவில்லை என்றால், இந்த டிசைன் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். சிலர் கை நிறைய மருதாணி வைப்பதை விரும்பமாட்டாரகள், அப்படி இருப்பவர்கள் இந்த எளிமையான டிசைனை தேர்வு செய்யலாம். உங்கள் கைகளின் பின்புறம் ஒரு அழகான மலர் கொடிகளை வரையலாம். அவை, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். உங்கள் கைகளை மேலும் அழகாக்க மோதிரம் அல்லது நெயில் பாலீஷ் இட்டுக்கொள்ளலாம்.
View this post on Instagram
இந்த டிசைன் ரம்ஜான் பண்டிகைக்கு மிகவும் என்ற டிசைன்களில் ஒன்று. நடுவில் உள்ள பிறை, நட்சத்திரங்கள் மற்றும் பிற அலங்காரங்களுடன் உங்களின் கொண்டாட்ட உணர்வை இன்னும் அதிகரிக்கும். மிகவும் எளிமையான மற்றும் தனித்துவமான இந்த டிசைன் பல அரபு ஹென்னா டிசைன்களில் மிகவும் பிரபலமானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eid Mubarak, Mehndi Designs, Ramzan