சமீபத்திய Met Gala நிகழ்வில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, பிரபல பாடகரும் மற்றும் தனது கணவருமான நிக் ஜோனாஸுடன் வந்திருந்தார். இவர் கழுத்தில் போட்டிருந்த நகை அனைவரின் முக்கிய கவனத்தையும் ஈர்த்தது.பிளாக் & ஒயிட் கவுனில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த வைர நெக்லஸின் விலை பற்றி வெளியாகி இருக்கும் தகவல் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.
பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த 11.6 காரட் மதிப்பிலான பல்கேரி வைர நெக்லஸின் மதிப்பு ஒரு கோடி, இரண்டு கோடி அல்ல மொத்தம் ரூ.204 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே வரும் மே 12-ம் தேதி ஜெனிவாவில் நடக்க உள்ள Sotheby's Luxury Week-ல் இந்த நெக்லஸ் ஏலம் விடப்படும் என கூறப்படுகிறது. இதன் விற்பனைக்கு முந்தைய மதிப்பீடு $25 மில்லியன் (ரூ. 204 கோடிக்கு மேல்) என International Gemological Institute தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே பிரியங்கா அணிந்திருந்த கண்கவர் வைர நெக்லஸின் விலை பற்றி ட்விட் ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்வீட் தான் இப்போது வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட வைரல் ட்விட்டில், நடிகை அணிந்திருக்கும் இந்த நெக்லஸின் மதிப்பு 25 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.204 கோடி) என குறிப்பிடப்பட்டு, MetGala-விற்கு பிறகு இந்த நெக்லஸ் ஏலம் விடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வைரல் ட்விட் கீழே..
https://twitter.com/GirlDontYell/status/1653206769169231872
ஏன் இந்த நெக்லஸ் மிகவும் சிறப்பானது?
பிரியங்கா அணிந்திருந்த நெக்லஸின் நடுவில் தொங்கும் நீல வைரமானது, Blue Diamond-ற்கான மிக உயர்ந்த மற்றும் அரிதான கலர் கிரேட் ஆகும். மேலும் Bulgari Laguna Blue ஒரு தனித்துவமான நகையாக இருக்கிறது. இந்த 11.16 காரட் வைரத்தை மிகவும் கண்கவரும் வகையில் ஆக்குவது Bulgari-ஆல் உருவாக்கப்பட்ட மவுண்ட் ஆகும். இதற்கிடையே பிரியங்கா Met gala ரெட் கார்பெட் மீது Ace designer Valentino-வின் Thigh-high slit கொண்ட தொடை தெரியும் வகையில் கவர்ச்சியான கருப்பு கவுன் அணிந்து நடந்து வந்தார். அழகான கவுனில் Met gala-வில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா பலத்த ஆரவாரத்தை பெற்றார். நடிகையுடன் அவரது கணவரான அமெரிக்க பாப் நட்சத்திரம் நிக் ஜோனாஸ்-ம் கைகோர்த்து வந்து ரெட் கார்பெட்டில் ஒன்றாக போஸ் கொடுத்தது அனைவரையும் ஈர்த்தது. வீடியோ கீழே:
https://twitter.com/i/status/1653187820138135557
இதற்கிடையே நடிகை தனது இன்ஸ்டாவில் Met Gala நிகழ்விலில் தான் பங்கேற்ற படங்களை பகிர்ந்துள்ளார். மிக காஸ்டலியான Blue laguna diamond இருக்கும் நெக்லஸை பிரியங்கா அணிந்திருப்பதை கேள்விப்பட்ட ரசிகர்கள், அவர் ஷேர் செய்துள்ள இமேஜின் கீழே வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். Met Gala-வின் இந்த ஆண்டு தீம் "Karl Lagerfeld: A Line of Beauty" என்பதாகும். இது வடிவமைப்பாளரின் பணி மற்றும் வாழ்க்கையை கொண்டாடுகிறது. இந்த தீமிற்கு ஏற்ப பிரியங்கா சோப்ரா கருப்பு நிற வாலண்டினோ கவுன் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fashion Look, Priyanka Chopra