2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் நடித்தவர் ஸ்ருதிகா.
அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார்.
ஸ்வப்னம் கொண்டு துலாபாரம் என்ற மலையாள படத்திலும் நடித்தார் ஸ்ருதிகா.
நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, நடிகர் யோகியின் கஸின் ஆவார். நடிப்பு வராததால் சினிமாவுக்கு முழுக்கு போட்ட ஸ்ருதிகா, அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார்.
விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சினிமாவை விட அதிக கவனம் பெற்றார். அவரின் வெகுளித்தன பேச்சு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
அதோடு சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு ஹேப்பி ஹெர்ப்ஸ் என்னும் ஸ்கின் கேர் பிராண்டை தொடங்கினார் ஸ்ருதிகா. இயற்கை முறையில் தயாராகும் அந்த பொருள்களை தான் அவர் பயன்படுத்துகிறாராம். தவிர தான் வழக்கமாக மேற்கொள்ளும் ஸ்கின் கேர் ரொட்டின்களையும் நேர்க்காணல்களில் குறிப்பிட்டிருந்தார்.
குளித்து முடித்ததும் கண்டிப்பாக மாய்ஸ்ச்சுரைசர் பயன்படுத்துவேன். இரவு ஹேப்பி ஹெர்ப்ஸின் டர்மரிக் நைட் கிரீம் யூஸ் பண்ணுவேன். இது கருவளையத்திற்கு சிறந்தது.
top videos
எங்காவது வெளியில் செல்லும்போதோ, அல்லது வாரத்திற்கு ஒரு முறை நான் பேஸ் மாஸ்க் போட்டு கழுவிவிடுவேன். அது பேசியல் செய்தது போன்ற ஒரு பொலிவை தரும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.