சுகர்ப்ரீ போன்ற செயற்கை இனிப்பூட்டிகளால் உடல் எடை குறையாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட நாட்கள் பயன்படுத்துவதால், சர்க்கரை நோய்க்கு வழி ஏற்பட்டுவிடும் என்று மூத்த மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சர்க்கரை நோயாளிகள், தனக்கான பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க சுகர்பிரீ எனப்படும் செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துகின்றனர். சர்க்கரை போன்ற இனிப்புத்தன்மையுடன் உள்ள செயற்கை இனிப்பூட்டிகளில் கலோரி இருக்காது.
அஸ்பார்டமே, சகாரின், சுக்ரலோஸ் ஆகியவை செயற்கை இனிப்பூட்டிகளாக உள்ளன. உடல் எடையைக் குறைப்பதற்காக செயற்கை இனிப்பூட்டிகளை உட்கொள்வது அதிகரித்து வருகிறது. ஆனால், செயற்கை இனிப்பூட்டிகளால் உடல் எடை குறையாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலில், உணவில் சர்க்கரை அளவை குறைக்க நினைப்பவர்கள், அதனை இயற்கை வழிமுறைகளில் செய்வதே சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பிரிவு இயக்குநர் பிரான்செஸ்கோ பிரான்கா, செயற்கை இனிப்பூட்டிகளில் எந்த ஊட்டச்சத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, செயற்கை இனிப்பூட்டிகளை எந்த அளவுக்கு எடுத்துக் கொண்டாலும், சர்க்கரை நோய் வராது என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்று சென்னை மருத்துவக் கல்லூரி நீரிழிவு நோய் துறைத் தலைவர் தர்மராஜன் தெரிவித்துள்ளார். இதேபோல, வெல்லம், பனை வெல்லம் போன்றவற்றையும் மாற்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.
மேலும் படிக்க... சபரிமலை பொன்னம்பல மேட்டில் பூஜை நடந்த விவகாரம்... வன ஊழியர்கள் இருவர் கைது..!
செயற்கை இனிப்பூட்டிகளை நாள்பட்டு எடுத்துக் கொள்ளும் போது, hypoglycemia எனப்படும் சர்க்கரை அளவு குறைந்துவிடும் என்றும் தெரிவித்த ஊட்டச்சத்து நிபுணர் பால பிரசன்னா, நீண்ட நாள் பயன்படுத்தினால், இன்சுலினை ஏற்றுக் கொள்ளாத நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.