ஹோட்டல், ரெஸ்டாரண்ட், நெடுஞ்சாலையோர தாபா போன்ற இடங்களில் சாப்பிட செல்லும்போது பல அசௌகரியங்களை நாம் எதிர்கொண்டிருப்போம். சில இடங்களில் நாம் ஆர்டர் செய்துவிட்டு அரை மணி நேரம் வரையிலும் காத்திருக்க வேண்டியிருக்கும். இன்னும் சில இடங்களில் எப்போதோ சமைத்த ஆறிப்போன உணவை கொண்டு வந்து கொடுப்பார்கள்.
அதிலும் நெடுஞ்சாலையோர உணவகங்களை பற்றி சொல்லவே வேண்டாம். அது என்றைக்கு சமைத்தது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால், கர்நாடக மாநிலம், கலபுர்கியில் உள்ள சாலையோர தாபா உணவகம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட உடனுக்குடன் உணவு சமைத்து கொடுக்கிறது.
இங்கு நீங்கள் எந்த உணவை ஆர்டர் செய்தாலும் 10 நிமிடம் தான். உங்கள் டேபிளில் ஆவி பறக்க உணவு காத்திருக்கும். கடாய் அல்லது இதர பாத்திரங்களை இவர்கள் சமையலுக்கு பயன்படுத்துவதில்லை. சீரான அளவில் நிறைய குக்கர்களை அடுக்கி வைத்திருக்கின்றனர். நாம் ஆர்டர் கொடுத்த பிறகே உணவை சமைக்க தொடங்குகின்றனர். குக்கர்களை உடனுக்குடன் சுத்தம் செய்து வைக்கின்றனர்.
மேலும் படிக்க : இந்த குளத்தில் குளித்தால் நோய்கள் தீருமாம்... ஒரு கிராம மக்களின் நம்பிக்கை... மேற்கு வங்கத்தில் விநோதம்...!
குக்கர் தாபா
குக்கரில் சமைத்து அசத்துவதால் அப்பகுதியில் இந்தக் கடையின் பெயர் குக்கர் தாபா என்று அழைக்கப்படுகிறது. சுத்தமாகவும், சுகாதாரமாகவும், அதே சமயம் புதிதாகவும் உணவு சமைக்கப்படுவதாலும், அது எல்லாவற்றையும் விட விரைவாக உணவு வந்து சேருகின்றது என்ற நிலையில் பல வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு உரிய இடமாக இது மாறி வருகிறது.
வாடிக்கையாளர் திருப்தியே முக்கியம்
தாபாவின் உரிமையாளர் சஞ்சய் இதுகுறித்து பேசுகையில், “வேறு எந்த விஷயத்தைக் காட்டிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம். அதனால் தான் வாடிக்கையாளர்களிடையே இது பிரபலமானதாக இருக்கிறது. உணவு தயார் செய்யும் வேலையை மனப்பூர்வமாக செய்யக் கூடிய நபர்களைத் தான் நாங்கள் வேலைக்கு வைத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க : நடிகர் சூரியின் ‘விடுதலை’ பேனருக்கு கற்பூரம் காட்டி அதகளப்படுத்திய புதுச்சேரி ரசிகர்கள்!
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருப்பதாலும், குப்பனூரில் உள்ள தொழிற்பேட்டைக்கு அருகாமையில் இருப்பதாலும், இங்கு வந்து செல்ல சுலபமாக இருக்கிறது. குறிப்பாக, தொழிற்பேட்டையில் பணிபுரியும் அதிகாரிகள், எண்ணற்ற தொழிலாளர்கள் இங்கு வாடிக்கையாக வந்து மதிய உணவு சாப்பிட்டுச் செல்கின்றனர்.
நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், குறிப்பாக லாரி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் விருப்பத்திற்கு உரிய இடமாக இந்த தாபா செயல்பட்டு வருகிறது.
அசைவமும் உண்டு
சிக்கன், மட்டன் என நீங்கள் எது கேட்டாலும் உடனுக்குடன் சமைத்து தரப்படும். அதேபோல, குக்கரில் அரிசி, முந்திரி பருப்பு, உலர் பழங்கள், நெய் உள்ளிட்டவை சேர்த்து தயார் செய்யப்படும் ஸ்பெஷல் வெரைட்டி இங்கு பிரபலம் மிக்கதாக இருக்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.