முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இறக்கைகள் போன்ற வளைந்த ஐலைனரை எப்படி அப்ளை செய்ய வேண்டும்..? உங்களுக்கான டிப்ஸ்..!

இறக்கைகள் போன்ற வளைந்த ஐலைனரை எப்படி அப்ளை செய்ய வேண்டும்..? உங்களுக்கான டிப்ஸ்..!

ஐ லைனர்

ஐ லைனர்

மெலிதான ஐலைனர் கோட்டிங் முதல், கண்களை கவர்ச்சியாக மாற்றும் விங்டு ஐலைனர் வரை பல வகைகளில் ஐலைனர் ஸ்டைல்ஸ் உள்ளன..

  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் வெளிக்காட்டும் கண்ணாடி எப்போதும் நம் கண்கள் தான். பொதுவாக பெண்களுக்கு இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆம் பெண்களுக்கு மேக்கப் இருந்தாலும், இல்லையென்றாலும் கொஞ்சம் ஐலைனர் போட்டுக்கொண்டால் போதும் முகத்தின் அழகு கூடும்.

இதோடு கண்கள் பளிச்சென்று தெரிவதோடு, கண்களின் அழகை மேம்படுத்தவும் இது உதவுகிறது. மெலிதான ஐலைனர் கோட்டிங் முதல், கண்களை கவர்ச்சியாக மாற்றும் விங்டு ஐலைனர் வரை பல வகைகள் உள்ள நிலையில், இன்றைக்கு எப்படி விங்டு ஐலைனரை நாம் உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து பிரபல ஒப்பனை கலைஞரான பிரியான குலாட்டி தரும் சில டிப்ஸ்கள் இங்கே..

  • முதலில், நீங்கள் விங்டு ஐலைனரை போட வேண்டும் என்றால், லேசான ஐ ஷேடோவைப் பயன்படுத்தவும். இது உங்கள் லைனருக்கு மென்மையான தளத்தை உருவாக்க உதவும்.
  • அடுத்து, வாட்டர் ப்ரூஃப் ஐலைனர் மூலம் உங்கள் மேல் கண் இமைக் கோட்டுடன் ஒரு மெல்லிய கோடு போடவும். இது உங்கள் கண்ணின் உள் மூலையில் தொடங்கி, கோட்டை வெளிப்புறமாக நீட்ட உதவும்.
  • பின் உங்கள் கண்ணின் வெளிப்புற மூலையில் ஒரு சிறிய முக்கோணத்தை வரைய லைனரைப் பயன்படுத்தவும். இந்த முக்கோணத்தை ஒரு லைனர் மூலம் நிரப்பவும்.
  • விங்ஸ் போன்ற வடிவத்தை உருவாக்க, லைனரை உங்கள் வெளிப்புறத்தில், மேல்நோக்கி உங்கள் புருவம் எலும்பை நோக்கி ஒரு கோடு அப்ளை செய்யுங்கள் . இந்த ஐலைனர் கோடு உள் மூலையில் மெல்லியதாகவும், வெளிப்புறமாக விரிவடையும் போது படிப்படியாக தடிமனாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • கடைசியாக, மஸ்காராவை உங்கள் மேல் மற்றும் கீழ் கண் இமைகள் இரண்டிலும் தடவ வேண்டும்.
  • Also Read | நீங்கள் சரியான Makeup Base-ஐ  பெற விரும்புகிறீர்களா.? உங்களுக்கு உதவும்  படிப்படியான வழிகள்..!

    போல்ட் விங் லைனை அடைவதற்கான உதவி குறிப்புகள்…

    • ஃபைன் டிப் கொண்ட ஐலைனர் பிரஷ் அல்லது பென்சிலைப் பயன்படுத்தவும். இது இன்னும் துல்லியமான லைனை பெற உதவும்.
    • ஐலைனரைப் பயன்படுத்தும்போது உங்கள் முழங்கையை மேற்பரப்பில் வைக்கவும். இது உங்கள் கையை நிலைநிறுத்த உதவும். உங்கள் கண்ணின் உள் மூலையில் சிறிய கோடுகளை வரைவதன் மூலம் ஐலைனரை வரைய வேண்டும். கடைசியாக, உங்கள் விங் லைன் வடிவத்தை முழுமையாக்க பிரஷ் அல்லது Q-டிப் பயன்படுத்தவும்.
    • இதுப்போன்று உங்களது கண்களை அழகாக்க வேண்டும் என்றால், பிரபல அழகுக்கலை நிபுணர் தெரிவித்துள்ள இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்துங்கள் போதும். நிச்சயம் கண்கள் மிகவும் அழகாக மற்றும் வசீகர தோற்றம் அளிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை..

First published:

Tags: Eye makeup, Eyes, Makeup