லேட்டஸ்ட் மேக்கப் மற்றும் ஸ்கின் கேர் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை அழகு ஆர்வலர்கள் ஷேர் செய்து கொள்ள கொள்ள சோஷியல் மீடியாக்களை ஒரு பிரபல பிளாட்ஃபார்மாக மாறியுள்ளன. டிக்டாக் மற்றும் இன்ஸ்டாவில் ஷேர் செய்யப்படும் பியூட்டி ட்ரெண்ட்ஸ்களில் புதுமையான சருமப் பராமரிப்பு நடைமுறைகள், ஒப்பனை பயிற்சிகள் முதல் முடி பராமரிப்பு முறைகள் வரை பல வகையில் ட்ரெண்டாகின்றன.
எனினும் அழகு நிபுணர்கள் ட்ரெண்டாகும் பியூட்டி டிப்ஸ்களை எச்சரிக்கையுடன் அணுக பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் அவற்றில் பல போலியான அல்லது பயனில்லாத டிப்ஸ்கள். அதே நேரம் உண்மையில் வேலை செய்யக்கூடிய சில வைரல் பியூட்டி ட்ரெண்ட்ஸ்களும் உள்ளன..! இவற்றில் சிலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபல சரும மருத்துவர் டாக்டர் கீத்திகா மிட்டல். இது தொடர்பாக சமீபத்தில் தனது இன்ஸ்டா போஸ்ட் ஒன்றில் "உண்மையில் வேலை செய்ய கூடிய 5 டிக்டாக் பியூட்டி ட்ரெண்ட்ஸ்" என்ற கேப்ஷன் கொடுத்து, 5 ட்ரெண்ட்ஸ்களை ஷேர் செய்துள்ளார்.
நீங்கள் முயற்சிக்க வேண்டிய டாப் 5 ட்ரெண்ட்ஸ் இதோ:
1. அன்டர் ஐ காஃபி பேட்ச்சஸ் (Under eye coffee patches): Under eye coffee patches பியூட்டி ட்ரிக் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் அதன் மூலம் சில நன்மைகளை பெறலாம். காஃபின் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையங்களை குறைக்க உதவுகிறது, மேலும் விழிப்புடனும் புத்துணர்ச்சியுடனும் தோற்றமளிக்க உதவுகிறது.
ரத்த நாளங்களை சுருக்கி, சருமத்தை அமைதிப்படுத்துவதன் மூலம் காஃபின் கண்களுக்குக் கீழே உள்ள Eye bags-களை குறைக்கும். காஃபி பேட்ச்கள் கண்களுக்குக் கீழே உள்ள வீக்கம், கருவளையம் மற்றும் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை நிர்வகிக்க உதவுவதாக பிரபல தோல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரிங்கி கபூரும் ஆமோதித்துள்ளார். இருப்பினும் நிபுணரிடம் கலந்தாலோசித்த பின் எந்தவொரு தயாரிப்பையும் பயன்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பல தயாரிப்புகளை முயற்சிப்பதை தவிர்க்கவும் இவர் அறிவுறுத்துகிறார்.
2. எல்இடி மாஸ்க்ஸ் (LED Masks): இந்த டைப் மாஸ்க்ஸ் சரும அமைப்பை மேம்படுத்த, முகப்பருவை குறைக்க மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க LED லைட்ஸ்களை பயன்படுத்துகின்றன. வெவ்வேறு தோல் பிரச்சனைகளுக்கு ஏற்ப LED Masks வெவ்வேறு கலர்ஸ்களில் வருகின்றன. இந்த மாஸ்க்ஸ் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு உதவுவதாக டாக்டர் கபூர் கூறியுள்ளார். இந்த டைப் மாஸ்க்ஸ் சருமத்தை உறுதிப்படுத்த, சுருக்கங்களை எதிர்த்து போராட, இளமை தோற்றத்தை அளிக்க என பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். வயதாகும் அறிகுறிகளை எதிர்த்து போராடவும் உதவும் என்கிறார்.
View this post on Instagram
3. ட்ரெட்டினோயின் ஃபார் ஹேர் ரீக்ரோத் (Tretinoin for hair regrowth): இந்த டாபிக்கல் retinoid தோலின் அமைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி முடி வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது. எனவே முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்க உங்கள் உச்சந்தலையில் ஒரு சிறிய அளவு இதனை அப்ளை செய்யலாம் என்கிறார் கீத்திகா மிட்டல் குப்தா.
4. ரோஸ்மேரி எக்ஸ்ட்ரேக்ட்ஸ் ஹேர் ஸ்ப்ரேஸ் (Rosemary extracts hair sprays): இது முடி வளர்ச்சியை தூண்ட மற்றும் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. உச்சந்தலை அரிப்பை ஆற்றவும், பொடுகு வராமல் தடுக்கவும் ரோஸ்மேரி சிறந்தது.
5. மன அழுத்தத்தை குறைக்க போடோக்ஸ் ஊசி (Botox injection): Masseter muscles-ல் போடோக்ஸ் ஊசி பயன்படுத்துவது டென்ஷனை போக்கவும், மன அழுத்தம் அல்லது பTeeth Grinding-ஆல் ஏற்படும் தலைவலியை குறைக்கவும் உதவும் என டாக்டர் கீத்திகா மிட்டல் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Hacks, Beauty Tips, Instagram, Skincare