முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வறண்ட சருமமா? - இருக்கவே இருக்கு வல்லாரை!

வறண்ட சருமமா? - இருக்கவே இருக்கு வல்லாரை!

வல்லாரை

வல்லாரை

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வல்லாரை, சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளை தடுக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும்படி பல மாற்று மருத்துவ மருத்துவர்கள் கூறுகிறார்கள். நினைவாற்றலுக்கு மட்டுமல்ல ஆரோக்கிய சருமத்திற்கும் வல்லாரை மிகவும் உகந்தது.

Centella Asiatica எனும் அறிவியல் பெயர் கொண்ட வல்லாரை, ஆசியாவில் அதிகளவில் இருக்கும் ஒரு மூலிகை தாவரம். இதனை இயற்கை முறையில் காயங்களை குணப்படுத்த சீன மக்கள் பயன்படுத்துகிறார்கள். சீரம், மாய்ஸ்சரைசர் மற்றும் ஓவர்நைட் ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றில் வல்லாரை இருக்கும்படியான காஸ்மெடிக்ஸ் மிகவும் சிறந்தவை என அழகுக் கலை நிபுணர்கள் கூறுகின்றனர். அமினோ அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை ஏராளமாக உள்ள வல்லாரை, எரிச்சலூட்டும் சருமத்தை குணப்படுத்துகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வல்லாரை, சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளை தடுக்கிறது. அதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து இளமை மற்றும் உறுதியான சருமத்தை பெற உதவும்.

தோல் சிவத்தல், வீக்கம் மற்றும் அரிப்பு ஆகியவற்றை சரிசெய்யும் வல்லாரை, சென்ஸிடிவ் மற்றும் வறண்ட சருமத்திற்கு ஏற்றது. வல்லாரை சிலருக்கு தோல் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும், எனவே அதை உங்கள் முகத்தில் தடவுவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Beauty Tips