முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இனி காசு கொடுத்து தலைக்கு ஹேர்டை வாங்க வேண்டாம்.. இயற்கையாக முடியை கறுப்பாக்க இதை செய்யுங்க..!

இனி காசு கொடுத்து தலைக்கு ஹேர்டை வாங்க வேண்டாம்.. இயற்கையாக முடியை கறுப்பாக்க இதை செய்யுங்க..!

ஹேர்டை பயன்படுத்தாமல் இயற்கையாக தலைமுடியை கறுப்பாக்க டிப்ஸ்!

ஹேர்டை பயன்படுத்தாமல் இயற்கையாக தலைமுடியை கறுப்பாக்க டிப்ஸ்!

கடையில் காசு கொடுத்து ஹேர்டை வாங்காமல். இயற்கையான பொருட்களை கொண்டு வீட்டிலேயே ஹேர்டை செய்து வெறும் 10 நிமிடத்தில் உங்கள் தலைமுடியை கருப்பாக மாற்ற சில உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போதைய வாழ்க்கைமுறை காரணமாக பலரும் இளநரை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இளநரை உள்ள பலர் தங்களின் முடியை கருப்பாக காட்ட ஹேர்டைகளை பயன்படுத்தி வருகின்றன. ஆனால், அது ஆரோக்கியமானது அல்ல. அதில், பல விதமான அமிலங்கள் உள்ளது. அது நமது தலைமுடியை உத்திர வைப்பதுடன், தலையில் உள்ள தோல்களுக்கும் பாதிக்கப்படும்.

வீட்டில் உள்ள சில இயற்கையான பொருட்களை கொண்டு உங்கள் தலைமுடியை இயற்கையாக கருமையாக்குவதற்கான சில இயற்கையான ஹேர்டை பற்றி உங்களுக்கு கூறுகிறோம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை பயன்படுத்துவதால், உங்களுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாது. வாருங்கள் வீட்டிலேயே ஹேர்டை தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.

பாதாம் ஹேர்டை :

பாதாமில் உள்ள கற்றலேசுகள் தலைமுடி நரைப்பதை வெகுவாக தடுக்கிறது. மேலும், இது காப்பர், மெலனினை உற்பத்தி செய்கிறது. இதனால் நரைமுடி ஏற்படுவது குறையும்.

தேவையான பொருட்கள் :

பாதாம் - 1 கைப்பிடி.

தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :

எடுத்துக்கொண்ட பாதாமை முதல் நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில் அதை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

Also Read | அழகான சிரிப்பை மறைக்கும் மஞ்சள் பற்களுக்கு இனி குட்-பை... உங்களுக்கான சிறந்த வழிகள்..!

அரைத்த பேஸ்ட்டை வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்தால் இயற்கையான ஹேர்டை ரெடி.

எப்படி பயன்படுத்துவது?

உங்கள் தலைமுடியை ஷாம்பு வைத்து அலசிய பின்னர், வடிக்கட்டிய பாதாம் சாறை உங்கள் தலையில் தேய்த்து 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். இதையடுத்து, 15 நிமிடம் கழித்து முடியை அலசவும்.

வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.

பிளாக் காஃபி :

தேவையான பொருட்கள் :

காபி தூள் - 5 டீஸ்பூன்.

தண்ணீர் - 2 கப்.

செய்முறை :

முதலில் 2 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.

கொதிக்க வைத்த நீரில் தற்போது 5 டீஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்கு ஆறவைக்கவும்.

இது ஆறியதும் இதை உங்கள் தலைமுடியில் தடவவும்.

top videos

    அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசவும். இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல முன்னற்றம் தெரியும்.

    First published:

    Tags: Beauty Tips, Hair Dye