முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முகத்தில் உள்ள தழும்புகளை மறைக்க உதவும் பப்பாளி பேஸ் பேக்.. வீட்டிலேயே செய்ய டிப்ஸ்.!

முகத்தில் உள்ள தழும்புகளை மறைக்க உதவும் பப்பாளி பேஸ் பேக்.. வீட்டிலேயே செய்ய டிப்ஸ்.!

முகப்பரு, முக தழும்புகளை மறைக்கும் பப்பாளி - தக்காளி பேஸ் பேக்!

முகப்பரு, முக தழும்புகளை மறைக்கும் பப்பாளி - தக்காளி பேஸ் பேக்!

pimple scar removal home remedies | உங்கள் முகம் எப்பவும் பள பளன்னு இருக்கணுமா?... அப்போ இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க. நல்ல பலன் கிடைக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலருக்கும் ஆரோக்கியமான சருமத்தை பெற ஆசை. ஆனால், அது வெறும் நிராசையாகவே இருக்கும். ஏனென்றால், முகப்பருக்களை ஒழித்துக்காட்டுவது என்பது லேசான விஷயம் அல்ல. அப்படியே பருக்களை நீக்கினாலும், அதனால் ஏற்படும் கருமை மற்றும் தழும்புகளை நீக்குவது எளிதான விஷயம் அல்ல.

சருமத்தில் காணப்படும் பருக்கள் மற்றும் தழும்புகளை மறைக்கும் பேஸ் பேக் ஒன்றினை தக்காளி மற்றும் பப்பாளியை பயன்படுத்தி எப்படி தயார் செய்வது என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 50 கிராம்.

பப்பாளி - 50 கிராம்.

பேஸ் பேக் செய்ய சிறிய கிண்ணம் ஒன்று.

செய்முறை :

எடுத்துக்கொண்ட தக்காளி பழத்தை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி வைக்கவும்.

தொடர்ந்து எடுத்துக்கொண்ட பப்பாளி பழத்தினை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

தற்போது மிக்ஸி ஜார் ஒன்று எடுத்து, அதில் நறுக்கிய தக்காளி, பப்பாளி பழம் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து, தனி ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ள பேஸ் பேக் ரெடி.

எப்படி பயன்படுத்துவது?

முறையாக தயார் செய்த இந்த பேக்கினை முகம் மற்றும் கழுத்து பகுதிக்கு தடவி 15 - 20 நிமிடங்களுக்கு உலர விடவும்.

பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்யவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

Also Read | இந்த 15 விஷயங்களை தினமும் ஃபாலோ பண்ணா உங்களுக்கு முதுமை என்பதே கிடையாது..!

பயன்கள் :

இந்த பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தக்காளி ஆனது, வைட்டமின் பி1, பி3, பி5 மற்றும் பி9 ஆகியவற்றின் சிறந்த மூலமாக உள்ளது. இவை, சருமத்தின் ஈரப்பத்ததை தக்க வைத்து, மிருதுவான மற்றும் மென்மையான சருமம் பெற உதவுகிறது.

பப்பாளி முகத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த பேக், சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் வைக்க உதவுகிறது.

top videos

    ஆன்டி ஆக்ஸிடன்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்ட தக்காளி மற்றும் பப்பாளி பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேஸ் பேக் ஆனது சரும துளைகளில் அடைந்திருக்கும் மாசுக்களை வெளியேற்றி பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.

    First published:

    Tags: Beauty Hacks, Beauty Tips, Nature Beauty, Pimple