பெண்கள் பெரும்பாலும் தினசரி ஹேர் வாஷ் செய்வது கடினம் தான். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறை என்றுதான் நீளமான கூந்தல் இருப்பவர்களே தலைக்கு குளிப்பார்கள். இந்த நிலையில் இயற்கையாகவே சுருள் சுருளாக அழகான முடி இருப்பவர்களுக்கு தலைக்கு குளிப்பது, சுருள் முடி பராமரிப்பு என்பதே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். சுருட்டை முடி கொண்டவர்கள் ஹேர் வாஷ் செய்யும் பொழுது ஏற்கனவே கொஞ்சம் வறட்சியாக இருக்கும் கூந்தலின் தன்மை மேலும் வறண்டு விடும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சுருட்டை முடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்; ஆனால் அதனை சரியாக பராமரிப்பது மிக மிகக் கடினம்.
சரியான ஹேர் கேர் பொருட்களை தேர்வு செய்வது முதல் இயற்கையாகவே இருக்கும் சுருள்களை பாதிக்காமல், கூந்தல் அழகாக இருப்பதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சுருட்டை முடியை பராமரிப்பது உங்களுக்கு கடினமாக உணர்ந்தால் இந்த எளிமையான ஹேர் வாஷ் டிப்ஸை பின்பற்றுங்கள்.
ஷாம்பூ பயன்படுத்தும் முன்பு கூந்தலை ஹைட்ரேட் செய்யுங்கள்
பொதுவாகவே தலைக்கு குளிக்கும் முன்பு சிறுது நேரம் எண்ணெய் வைத்து ஊறிய பின்னர் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கிறது. சுருள் கூந்தல் இருப்பவர்கள் ஷாம்பு பயன்படுத்தும் முன்பு, கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்க, நிச்சயமாக எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க் ஏதாவதை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது, ஷாம்பு போட்டு ஹேர்வாஷ் செய்த பிறகு கூந்தல் வறண்டு போகாமல் தடுக்க உதவும்.
சுருட்டை முடிக்கு பிரத்யேகமான, ஈரப்பதம் அளிக்கும், மாயிஸ்ச்ச்சரை லாக் செய்யும் கிரீம் அல்லது ஹேர் மாஸ்க்குகள் தற்போது கிடைக்கின்றன. ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய், கிளிசரின் உள்ளிட்ட கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கும் பல விதமான பொருட்கள் உள்ளன. இவை ஹேர் கேர் புராடக்ட்களை நீங்கள் தேர்வு செய்து பயன்படுத்தலாம். அல்லது தேங்காய் எண்ணெயை நன்றாக தலைக்கு தடவி 1– 2 மணி நேரம் ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் கூந்தலின் ஈரப்பதம் அப்படியே இருக்கும்.
ஸ்கேல்ப் மீதும் கவனம் தேவை: சுருள் முடி பராமரிப்பு என்று வரும் பொழுது பல பெண்கள் ஷாம்புவைத் தவிர்த்து கண்டிஷனர் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது ஷாம்பு போட்டால் கூந்தல் வறண்டு போகிறது என்ற காரணத்திற்காக கண்டிஷனரை மட்டும் பயன்படுத்தும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். தலைக்கு குளிப்பது என்பது கூந்தலை சுத்தம் செய்வது மட்டுமல்லல் ஸ்கேல்ப் என்று கூறப்படும் மண்டைப் பகுதியும் சுத்தமாக வைத்திருப்பதையும் குறிக்கிறது.
எனவே கண்டிஷனர் பயன்படுத்தி ஹேர் லாக்ஸ்சை மட்டும் சுத்தம் செய்தால் மண்டை பகுதியில் அரிப்பு ஏற்படலாம் மற்றும் மெல்லிய வாடை வீசத் துவங்கும். எனவே சுருள் முடி கூந்தல் இருப்பவர்கள், மைல்டான, அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்தி மண்டைப் பகுதியையும் சுத்தம் செய்வது மிக மிக அவசியம். கிளிசரின், கற்றாழை, ஷியா பட்டர் உள்ளிட்ட மைல்டான ஷாம்பு வகைகள் கிடைக்கின்றன. இவை ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் சுருள் முடிக்கு தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கிறது.
கண்டிஷனரை மறக்கவே கூடாது! சுருள் முடிக்கான பெஸ்ட் ஃபிரெண்ட், கண்டிஷனர் தான்! எனவே, எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பயன்படுத்த வேண்டும். வழக்கமான கூந்தலை விட சுருள் கேசத்துக்கு கூடுதலாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை நேரடியாக உள்ளங்கையில் ஊற்றி, கூந்தலின் நீளத்துக்கு அப்ளை செய்ய வேண்டும். முதலில், கூந்தலில் சிக்கு நீக்கி விட்டால், கண்டிஷனரை எளிதாக அப்ளை செய்ய முடியும். நீங்கள் எந்த பிராண்டு ஷாம்பூவை பயன்படுத்துகிறீர்களோ, அதே பிராண்டு கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். சில கண்டிஷனர்களில், தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர் போன்ற இயற்கையாக டீ-டாங்கில் செய்ய உதவும் பொருட்களோடு வருகிறது. ஏற்கனவே கூறியது போல, உங்கள் முடியை வறட்சியாக்கும் சல்பேட், பாராபென் உள்ளிட்ட ரசாயனங்கள் இல்லாத கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.
லீவ்-இன் கண்டிஷனரைப் பயன்படுத்தலாம்: உங்கள் கூந்தலில் மாயிஸ்ச்சர் இருப்பதை உறுதி செய்ய, நீங்கள் லீவ்-இன் கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். அதாவது, நீங்கள் கண்டிஷனர் அப்ளை செய்த பின்னர் கூந்தலை அலச வேண்டாம், அப்படியே விட்டுவிடலாம். ஈரப்பதமும், கூந்தலின் இயற்கையான சுருள் தன்மையும் மாறாமல் அடுத்த ஹேர் வாஷ் வரை அப்படியே இருக்கும். ஈரமான கூந்தலில் லீவ்-இன் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். இதை வேரிலிருந்து பயன்படுத்தாமல், கூந்தலின் பாதி நீளத்தில் இருந்து நுனி வரை அப்ளை செய்யலாம். கெமிக்கல் இல்லாத, இயற்கையான, நுண்சத்துக்கள் நிறைந்த கண்டிஷனரை நீங்கள் தேர்வு செய்யலாம்.
அழகான சுருள் கேசத்தை மேம்படுத்திக் காட்டும் ஜெல்லைப் பயன்படுத்துங்கள்: தலைக்கு குளித்து வந்த பின்னர், பருத்தி துணி அல்லது டவல் பயன்படுத்தி, தலையை உலர்த்தவும். சுருள் சுருளான கூந்தல் அப்படியே இருக்க, தற்போது பலவிதமான ஜெல் பொருட்கள் கிடைக்கின்றன. லைட்வெயிட் கர்லிங் ஜெல்ளை வாங்கி நீங்கள் ஹேர் வாஷ் செய்யும் போதெல்லாம் பயன்படுத்தலாம். இது உங்கள் சுருள் கேசத்திற்கு அதிக ஹைட்ரேஷன் வழங்கி, 2 நாட்கள் வரை ஈரப்பதத்தை நீட்டிக்கச் செய்யும்.
Also Read : Grey Hair : இளம் வயதிலேயே நரைமுடி பிரச்னையா..? இந்த பழக்கம் காரணமாக இருக்கலாம்..!
சுருள் கேசம் உள்ளவர்கள் ஹேர் வாஷ் பற்றிய சில குறிப்புகள் :
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Curly hair, Hair care