இன்று பலருடைய சருமப் பிரச்சினைகளில் மிக முக்கியமானது முகப்பரு தான். எதுவும் செய்யாமல் இருந்தாலே சிலருக்கு முகப்பரு வரக்கூடும். ஆனால், இதற்கு வெளிப்புற விஷயங்கள் கூட காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு வேறு சருமத்துடன் உரசினால் கூட முகப்பரு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில், தனது பார்ட்னரின் தாடியை பெரும்பாலும் எல்லா பெண்களும் விரும்புவார்கள்.
ஆனால் இந்த தாடிக்கூட உங்களுக்கு ரேஷஸ் மற்றும் முகப்பருவை உண்டாக்கும் என்று தெரியுமா? இது பற்றி மருத்துவ ஆராய்ச்சியாளரான டாக்டர் மெஹ்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், 'பெண்களின் முகம், ஆணின் தாடியுடன் உரசும் போது முகத்தில் உராய்வை ஏற்படுத்தும்போது, சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும், இதனால் முகப்பரு அல்லது வடுக்கள் ஏற்படலாம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய பெங்களூரின் மணிப்பால் மருத்துவமனையின் ஆலோசகரும், சரும மருத்துவருமான டாக்டர் தீபா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ஆணின் தாடியால் பெண்ணின் சருமத்திற்கு ரேஷஸ், பருக்கள் ஏற்படலாம் என்று குறிப்பிடுகிறார். அதாவது, ஆணின் தாடியால் பெண்ணின் தோலில் தடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, தாடியில் உள்ள முடி கரடுமுரடானதாகவும், கூர்மையாகவும் இருக்கும், இது தோலில் உராய்வு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த உராய்வு தோலில் நுட்பமான சிராய்ப்புகளை ஏற்படுத்தும். மேலும் இது தடிப்புகளையும் உருவாக்க கூடும் என்று விளக்கியுள்ளார்.
தாடியில் இருந்து பாக்டீரியா, அழுக்கு மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்த கூடிய பாதிப்புகளும் ஏற்படலாம். இதனால், தாடியை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே, இந்த சூழலில் மற்றவர்களுக்கு அலர்ஜி மற்றும் சருமப் பிரச்சினைகளைத் தூண்டலாம். இதன் விளைவாக தடிப்புகள் அல்லது தோல் அழற்சி ஏற்படலாம். இதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு காரணி என்னவென்றால், பியர்டு (தாடி) ஆயில், அல்லது ஸ்டைலிங் பொருட்கள் போன்ற புராடக்ட்களும் சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
சிலருக்கு இது போன்ற தயாரிப்புகளில் பயன்படுத்த கூடிய வேதி பொருட்களால் ஒவ்வாமை ஏற்படுத்து வாய்ப்புகள் உள்ளது. எனவே, இத்தகைய புராடக்ட்களை பயன்படுத்திய ஒருவரின் தாடியுடன் உராயும் போது, மற்றவரின் சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும், இது ரேஷஸ் மற்றும் பருக்களை உண்டாக்கும். மேலும், தாடிக்கும் சருமத்துக்கும் இடையே ஏற்படும் உராய்வானது, செபேஷியஸ் சுரப்பிகளைத் தூண்டி, எண்ணெய்யின் உற்பத்தியை அதிகரிக்கும். இது முகப்பரு மற்றும் துளைகளை உண்டாக்கும் என்று டாக்டர் தீபா கூறுகிறார்.
தாடி சார்ந்த சரும பிரச்சனைகளை தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து பார்க்கலாம்!
ஹைஜீன்: தாடியை சுத்தமாக, ஹைஜீனிக்காக பராமரிக்க வேண்டும். அதற்காக தினசரி க்ளென்சரை பயன்படுத்துவதி தாடியை சுத்தமாக வைத்து கொள்ள முடியும். மேலும், தாடி தூய்மையாக இருந்தால், சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும் அழுக்கு, பாக்டீரியா மற்றும் அதிகப்படியான எண்ணெய்களை அகற்ற உதவுகிறது.
ஈரப்பதம்: வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்க தாடியின் அடியில் உள்ள தோலை எப்போதும் ஈரப்பதமாக வைத்து கொள்வது நல்லது. இது அரிப்பு, மற்றும் எரிச்சலை குறைத்து பாதிப்புகளை தடுக்கும். ஈர்ப்பதத்தைத் தக்க வைக்க மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தலாம்.
டிரிம்மிங் மற்றும் ஷேப்பிங்: தாடியை எப்போதும் சீராக வைக்க, அதிக பிரச்சனை ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து டிரிம் செய்யலாம்.
கெமிக்கல் பேஸ்டு புராடக்ட்களை தவிர்க்கவும்: உங்கள் சருமத்தில் அதிக கெமிக்கல்ஸ் உள்ள க்ரூமிங் பொருட்களைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை சருமத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெய்களை நீக்கி வறட்சியை ஏற்படுத்தும்.
Also Read | தாடி ஸ்டைலை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என கண்டுபிடிக்கலாம்..!
தலையணை உறைகள்: பொதுவாக தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. ஏனெனில், தாடி முடி மற்றும் தலைமுடிகளில் உள்ள அழுக்குகள், பாக்டீரியாக்கள் இவற்றில் ஒட்டிக்கொள்ள கூடும். எனவே, இதன் பாதிப்புகளை தடுக்க தலையணை உறைகளை அடிக்கடி மாற்றுச்வது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Acne, Beard care, Pimple