அனைவரும் சரும பராமரிப்புக்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது உண்டு. சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க சந்தைகளில் விற்பனை செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களை ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால், அவை அனைத்தும் சில நாட்களுக்கு மட்டுமே பயனளிக்கின்றன. மேலும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியவை.
நம்மில் பலர் முகத்தில் உள்ள இறந்த சருமத்தை நீக்க பல விதமான ஸ்க்ரப்களை பயன்படுத்துவோம். ஆனால், சமையலறையில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. இனி கடைகளில் ஸ்க்ரப்களை வாங்கி பணத்தை வீணாக்க வேண்டாம். வீட்டில் உள்ள ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிப் புது பொலிவை தரும்.
தேவையான பொருட்கள் :
தேன் - 2 டீஸ்பூன்
ஓட்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை :
ஓட்ஸை மிக்ஸியில் அரைத்து, அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும்.
இப்போது இதை உங்கள் முகத்தில் தடவி, 5-6 நிமிடங்கள்வரை கைகளால் மென்மையாகத் தேய்க்கவும்.
சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவவும்.
இந்த செய்முறையை தினமும் செய்யக் கூடாது. வாரத்தில் 2 நாட்கள் பயன்படுத்தினால் போதுமானது.
உங்கள் சருமம் உணர்திறன் வாய்ந்ததாக இருந்தால், பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள்.
Also Read | கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர்
தேன் மற்றும் ஓட்ஸின் நன்மைகள்
தேன் மற்றும் ஓட்ஸ், இவை இரண்டுமே நம் சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. ஓட்ஸ், நம் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை சுத்தம் செய்து புதிய பொலிவைத் தரும் அதே சமயம், தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை பயக்கும். இதன் செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறையைப் பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oil Skincare, Skin Care