முல்தானி முட்டியை பெரும்பாலும் நாம் முகத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால், இதை தலை முடி ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தலாம் என உங்களுக்கு தெரியுமா?
ஹேர் கேர் என்பது நம்மில் பலருக்கும் ஆர்வத்துடன் செய்யும் விஷயங்களில் ஒன்று. ஆனால், அதற்கான நேரம் நமக்கு கிடைப்பதில்லை. எனவே தான் நம்மில் பலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஹேர் கட், ஹேர் கலர், ஹேர் ஸ்ட்ரெய்டனிங் ஏன் ஹேர் வாஷ் என அனைத்தையும் சலூன்களில் செய்து வருகிறோம்.
சலூன்களில் இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதால் அது முடி உதிர்வு, முடி வறட்சி, முடி அடர்த்தி குறைவு என அனைத்து பிரச்சனைகளும் ஏற்படும். ஒரு 20 நிமிடத்தில் முல்தானி மெட்டியை கொண்டு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி என இங்கே காணலாம்.
முறை - 1
முல்தானி மெட்டி மற்றும் முட்டை பயன்படுத்தி முடியை ஸ்ட்ரெய்டனிங் செய்யலாம்
தேவையான பொருட்கள் :
முல்தானி மெட்டி தூள்- 1 கப்
முட்டை- 2.
செய்முறை :
முதலில் பேஸ்ட் தயார் செய்ய, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் முல்தானி மெட்டியுடன் இரண்டு அல்லது மூன்று முட்டையின் வெள்ளைக்கருவை சேர்க்கவும்.
இப்போது நன்றாக கலக்கவும். இப்போது இந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் முடியில் தடவவும்.
இந்த ஹேர் மாஸ்க்கை சுமார் 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இறுதியாக, தலைமுடியை பெரிய பல் சீப்பு பயன்படுத்தி சீவுங்கள்.
முறை - 2
முல்தானி மெட்டி மற்றும் அரிசி மாவு பயன்படுத்தி முடியை ஸ்ட்ரெய்டனிங் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
முல்தானி மெட்டி- 1 கப்.
அரிசி மாவு- 5 டீஸ்பூன்.
2 முட்டையின் வெள்ளைக்கரு.
செய்முறை :
முதலில், ஒரு கப் முல்தானி மெட்டியில் 5 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது அதில் சுமார் 2 முட்டைகளின் வெள்ளைக்கருவை சேர்த்து அடித்து மிருதுவான பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை வேர்கள் முதல் முடியின் முனை வரை தடவவும். சுமார் 5 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்.
அதன் பிறகு, பெரிய பல் சீப்பு பயன்படுத்தி தலைமுடியை ஸ்ட்ரெய்டனிங் செய்யவும்.
Also Read | உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த 5 உணவுகளை எடுத்துக்கோங்க.. ரெசிபி லிஸ்ட்!
மற்றொரு 10 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டுவிட்டு, பின்னர் தலையை சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு ஒரு முறை உபயோகிக்கலாம்.
பயன்கள் :
முல்தானி மெட்டியை முடியில் உபயோக்கியத்தால், அது முடியை ஸ்ட்ரெய்டனிங் செய்வதோடு மட்டுமின்றி, முடிக்கு ஊட்டமளிக்கிறது
உச்சந்தலையில் இயற்கை எண்ணெய்களைத் தக்க வைத்துக் கொள்வதோடு, ஆழ்ந்த நீரேற்றத்தையும் முடிக்கு வழங்குகிறது.
முல்தானி மெட்டி உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கும்.
முடி சேதத்தை குறைக்கவும், அவற்றை ஸ்ட்ரெய்டனிங் செய்யவும் இதைப் பயன்படுத்தலாம். இதில், மினரல்கள் நிறைந்துள்ளதால், உங்கள் உச்சந்தலையை முழுமையாக சுத்தப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், பொடுகு வராமல் தடுக்கவும் உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Multani mitti, Nature Beauty