ஆண், பெண் என அனைவரும் தற்போதைய காலத்தில் மேக்கப் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தான், ஆழகுசாதன பொருட்கள், மேக்கப் டிப்ஸ் ஆகிய வீடியோக்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக “Diamond Lips” என்ற ஹேஷ்டேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அதிகமாக மேக்கப் போடாமல் குறைந்த நேரத்தில் உங்கள் உதடுகளை வைரத்தை போல மின்ன செய்வது தான் இதன் ட்ரிக்.
இந்த பியூட்டி ஹேக் மூலம் மெல்லிய உதடுகளை தடிமனாகவும், பெரிய உதட்டை சிறியதாகவும் காட்டலாம். வெறுமனே நமது கையில் இருக்கும் லிப்ஸ்டிக்கை வைத்து உங்கள் உதட்டை வைரம் போல ஜொலிக்க வைக்கலாம். நீங்களும் இது போன்ற கிளாசியான உதட்டை பெற விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
டைமண்ட் லிப்ஸ் மேக்கப் ட்ரெண்ட் என்பது என்ன?
ஒவ்வொரு அழகு நிபுணர்களும் புதிய புதிய விஷயங்களை கண்டுபிடிக்க விரும்புகின்றனர். ஏனென்றால், ஒரே மாதிரியான மேக்கப் முறைகளை கடைபிடித்தால் அது பழமையானதாக மாறுவதுடன் மக்கள் மத்தியில் சலிப்பையும் ஏற்படுத்தும். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட புதிய மேக்கப் ட்ரிக் தான் இந்த டைமண்ட் லிப்ஸ். இதனால், உங்கள் உதவு மிகவும் கவர்ச்சிகரமாக தெரியும். அதுமட்டும் அல்ல, மற்றவர்களின் கவனத்தை எளிமையாக நீங்கள் ஈர்க்கலாம்.
டைமண்ட் லிப்ஸ் என்பது டிக்டோக்கில் வைரலாகி வரும் டிரெண்டிங் மேக்கப் ஹேக் ஆகும். இது பலரின் இதயங்களை வென்று வருகிறது. ஏனென்றால், இதற்கு தனியாக எந்த பொருளும் காசு கொடுத்து வாங்க வேண்டாம். கையில் உள்ள பொருட்களை வைத்தே நீங்கள் வைரம் போல ஜொலிக்கலாம். இந்த ஹேக் மூலம் உங்கள் உதடு, மூக்கு, தாடை ஆகியவற்றை ஹைலைட் செய்து காட்டலாம். டைமண்ட் லிப்ஸ் எவ்வாறு பெறுவது என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
வைர உதடுகளை பெறுவது எப்படி?
1. முதலில் நீங்கள் ஒரு சில்வர் கலர் ஐலைனர் அல்லது ஐ ஷேடோவை உங்கள் உதட்டின் மேல் பகுதி (Cupid's bow) மற்றும் கீழ் உதட்டின் நடுப்பகுதியில் தடவ வேண்டும்.
2. இப்போது, உங்கள் விரலைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த கலர் லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவவும்.
Also Read | ஒரு பைசா செலவில்லாமல் ஒரே வாரத்தில் முகம் பிரகாசிக்க இதை செய்தால் போதும்.!
3. இப்போது நியூட் கலர் லிப் பென்சிலை எடுத்து, கீழ் உதடுகளின் விளிம்புகளை மார்க் செய்யவும்.
4. உங்கள் உதடுகளின் மீது லிப் கிளாஸ்யை தடவவும். இப்போது உங்கள் உதடு வைரம் போல ஜொலிக்கும்.
இது உங்களுக்கு முழுமையான உதடு தோற்றத்தைக் கொடுக்கும். நீங்கள் மற்றொரு படி சேர்க்க விரும்பினால், நீங்கள் சிறிது ஷிம்மர் பவுடரை உபயோகித்து உதட்டின் தோற்றத்தை சரி செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Hacks, Beauty Tips, Lip, Lipstick, Makeup