உடம்பில் உள்ள தேவையற்ற முடியை பெண்கள் எப்போதும் விரும்புவதில்லை. இவற்றை நீக்குவதற்கு பல தொழில்நுட்ப முறை இருந்தாலும், பெரும்பாலானோர் பியூட்டி பார்லருக்கு சென்று வேக்ஸிங் செய்வதையே விரும்புகிறார்கள். ஏனென்றால், இதற்கான செலவு கம்மி.
ஆனால், வெறும் 10 ரூபாய் செலவில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து வீட்டிலேயே வேக்ஸ் தயாரிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதை எப்படி எப்படி தயாரிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரை - 2 கப்.
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் .
தண்ணீர் - 2 டீஸ்பூன்.
உப்பு - 1 டீஸ்பூன்.
தயாரிக்கும் முறை :
மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு அடிகனமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
குறைந்த தீயில் வைத்து இவற்றை நன்றாக கலக்கவும்.
சர்க்கரை உருகி இந்த கலவையின் நிறம் தேன் போல மாறும் வரை காத்திருக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்து ஒரு பாட்டில் அல்லது கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை :
உங்களுடைய கை அல்லது கால்களில் பவுடர் போட்டுக் கொள்ளவும்.
வேக்ஸ் செய்ய பயன்படுத்தப்படும் கத்தி அல்லது ஐஸ்கிரீம் ஸ்டிக் வைத்து வேக்ஸை தடவவும்.
இப்போது முடி வளர்ச்சி இருக்கும் திசையில் வேக்ஸ் ஸ்ட்ரிப்பை ஒட்டி எடுக்கவும்.
நன்மை :
கடைகளில் விற்கப்படும் இரசாயனங்கள் நிறைந்த வேக்ஸ் பயன்படுத்துவதால் ஒரு சிலருக்கு சரும தடிப்புகள் ஏற்படலாம்.
Also Read | முகப்பரு இல்லாமல் முகம் எப்பவும் பளபளன்னு இருக்கனுமா..? இதை மட்டும் செஞ்சுடாதீங்க..
இதை தடுக்க வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த வேக்ஸை பயன்படுத்தலாம்.
வீட்டில் தயாரிக்கப்படும் இந்த வேக்ஸ் பயன்படுத்துவதால் சருமம் வறண்டு போகாமல் மென்மையாக இருக்கும்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் இந்த வேக்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Upper lip hair remove, Wax, Waxing