முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயிலால் முகத்தின் ஒரிஜினல் நிறமே போய்விட்டதா..? மீட்டெடுக்க உதவும் பப்பாளி - ஆரஞ்சு பேஸ் பேக்.!

வெயிலால் முகத்தின் ஒரிஜினல் நிறமே போய்விட்டதா..? மீட்டெடுக்க உதவும் பப்பாளி - ஆரஞ்சு பேஸ் பேக்.!

சரும வறட்சியை நீக்கும் பப்பாளி பேஸ் பேக் வீட்டிலேயே செய்யலாம்.

சரும வறட்சியை நீக்கும் பப்பாளி பேஸ் பேக் வீட்டிலேயே செய்யலாம்.

கோடைக்காலம் வந்துவிட்டது. உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க தனி கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில், சரும வறட்சியை நீக்கும் பப்பாளி பேஸ் பேக் வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதை போல, சரும ஆரோக்கியத்தின் மீதும் தனி அக்கறை செலுத்த வேண்டும். கோடை காலம் வந்து விட்டது. 10 நிமிடம் வெயிலில் சென்று வந்தாலே, முகம் கருமையாக களையிழந்து போய்விடும். அதை சரி செய்ய நாம் விலை உயர்ந்த கிரீம்களை பயன்படுத்துவோம். ஆனால், வீட்டில் அன்றாடம் இருக்கும் 2 பழங்களை கொண்டு உங்கள் சருமப் பிரச்சினைகளை சரி செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?.

வைட்டமின் D அதிகம் உள்ள மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஆரஞ்சு மற்றும் பப்பாளி பழங்கள் கொண்டு, எளிய முறையில் பேஸ் பேக் ஒன்றை செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

நன்கு பழுத்த பப்பாளி துண்டுகள் - 1 கப்.

ஆரஞ்சு பழ சாறு - 2 ஸ்பூன்.

தேன் - ஒரு ஸ்பூன்.

பவுல் - ஒன்று.

பேஸ் பேக் செய்முறை :

நன்கு பழுத்த பப்பாளியை சிறு சிறு துண்டுகளா வெட்டி ஒரு பவுலில் வைக்கவும். பின்னர், இதனுடன் ஆரஞ்சு பழ சாறு மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.

மசிக்க கடினமாக இருந்தால், மிக்சி ஜாரில் போட்டு நன்றாக மைப்போல அரைத்து எடுத்தால், பேஸ் பேக் தயார்.

எப்படி பயன்படுத்துவது?

பேஸ் பேக்கை உபயோகிப்பதற்கு முன், உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். பின்னர், உங்கள் முகத்தில் ஈரம் இல்லாமல் ஒரு துணியை வைத்து துடைக்கவும்.

இப்போது, முறையாக தயாரித்த இந்த பேஸ் பேக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்ய நல்ல மாற்றம் தெரியும்.

Also Read | உங்க உதடு ரொம்ப கருப்பா இருக்கா..? ரோஜா நிறத்தில் மாற இதை ட்ரை பண்ணுங்க!

தேன் பயன்படுத்துகையில் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம். எனவே, இந்த பேக்கினை தேன் இல்லாமலும் தயாரித்து பயன்படுத்தலாம். வாரம் 2 முறை இந்த பேக் பயன்படுத்தினால் நல்ல மாற்றம் தெரியும்.

பயன்கள் :

பப்பாளி பழத்தில் காணப்படும் நொதிகள் சரும வளர்ச்சிக்கும், முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பொலிவான சருமத்தை பெற உதவும்.

சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது முகப்பரு மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையினை போக்க உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தேன், மிருதுவான மற்றும் மென்மையான சருமம் பெற உதவுகிறது. எனவே, இந்த தேனினை சருமத்திற்கு பயன்படுத்த, வயதுமூப்பு குறியீடுகள் குறைந்து இளமை தோற்றம் திரும்புகிறது.

top videos

    மேலும், இந்த பேஸ் பேக் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. முகத்தில் காணப்படும் மென் கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கி இளமையான தோற்றம் பெற உதவுகிறது.

    First published:

    Tags: Beauty Hacks, Beauty Tips, Papaya