முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியனுமா..? அப்போ இதை செய்யுங்க

எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியனுமா..? அப்போ இதை செய்யுங்க

சரும பொலிவுக்கு உதவும் குங்குமப்பூ பேஸ்பேக் தயாரிப்பது எப்படி?

சரும பொலிவுக்கு உதவும் குங்குமப்பூ பேஸ்பேக் தயாரிப்பது எப்படி?

அனைவருக்கும் ஆரோக்கியமான சருமத்தை பெற ஆசை. நீங்களும் அப்படி ஆசைப்பட்டால், உங்களுக்கு ஒரு சூப்பராணம் பேஸ்பேக் பற்றி கூறுகிறோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் பல பேரை பாத்திருப்போம் எவ்வளவு வயதானாலும் இளமையாகவே இருப்பார்கள். அதுமட்டும் அல்ல, அவர்கள் சருமம் மென்மையாகவும், ஒரு கரும்புள்ளி கூட இல்லாமல் இருப்பார்கள். அப்படி என்னதான் யூஸ் பண்ணுவாங்களோ இவ்வளவு அழகா இருக்காங்க என யோசித்திருப்போம். அப்படி, உங்க முகமும் ஜொலிக்கனும் என நீங்க ஆசைப்பட்டால், நாங்க உங்களுக்கு ஒரு சூப்பர் ஃபேஸ்பேக் பற்றி கூறுகிறோம்.

இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த ஒரு மசாலா பொருளாக கருதப்படும் குங்குமப்பூவை பயன்படுத்தி சரும பொலிவுக்கு உதவும் ஒரு சூப்பர் பேஸ்பேக் ஒன்றினை செய்வது எப்படி என பார்க்கலாம்.

​தேவையான பொருட்கள் :

குங்குமப்பூ - 3 இழைகள்.

பால் - 1 ஸ்பூன்.

தேங்காய் எண்ணெய் - கால் ஸ்பூன்.

தேன் - கால் ஸ்பூன்.

தண்ணீர் - 1 ஸ்பூன்.

​பேஸ்பேக் செய்முறை :

முதலில், குங்குமப்பூ இழைகளை ஒரு கோப்பையில் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்.

அடுத்த நாள் காலை, இதனுடன் பால், தேங்காய் எண்ணெய், தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள சரும பொலிவுக்கு உதவும் பேஸ்பேக் ரெடி.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்னர், முகத்தில் ஈரம் இல்லாதபடி ஒரு துணியால் துடைக்கவும்.

இப்போது, ஒரு பிரஸ் கொண்டு இந்த ஃபேஸ் பேக்கினை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடத்திற்கு உலர விட்டு, குளிர்ந்த நீர் கொண்டு மீண்டும் முகத்தை சுத்தம் செய்துவிடவும்.

பயன்கள் :

ஃபேஸ்பேக்கில் நாம் பயன்படுத்தும் குங்குமப்பூ சருமத்தின் pH அளவை சமநிலைப் படுத்தும் பண்பு கொண்டுள்ளது. எனவே, இந்த பேஸ்பேக்கினை பயன்படுத்த சருமத்தில் காணப்படும் கருந்திட்டுக்கள் மற்றும் வடுக்கள் குறையும்.

Also Read | நீங்க எப்பவும் இளமையா தெரியனுமா?... இந்த பொடியை பயன்படுத்தி குளிங்க!

இந்த பேஸ்பேக்கில் நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன், சருமத்தின் ஈரப்பத்ததை தக்க வைக்கும் பண்பு கொண்டது. அந்த வகையில் சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்குகிறது.

பாலில் லாக்டிக் அமிலம் காணப்படுகிறது. இந்த அமிலம், சருமத்தின் அடைபட்ட துளைகளை ஆழமாக சுத்தம் செய்து, சரும துளைகளில் உள்ள மாசுக்களை அகற்றுகிறது. அந்த வகையில் பருக்களை தடுக்க இந்த பேஸ்பேக் பெரிதும் உதவுகிறது.

top videos

    பேஸ்பேக்கில் நாம் பயன்படுத்தும் தேன், சரும வறட்சியை நீக்குவதோடு, சருமம் தளர்வடைவதையும் தடுக்கிறது. மேலும், சருமத்தில் காணப்படும் மென்கோடுகள் மற்றும் சுருக்கங்களை மறைத்து இளமை தோற்றத்தை மீட்டு தருகிறது.

    First published:

    Tags: Beauty Tips, Blackheads, Saffron, Skin Care