முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முதல் முறையாக ஹென்னா பேக் ட்ரை பண்றீங்களா..? நல்ல ரிசல்ட் கிடைக்க இப்படி அப்ளை பண்ணுங்க..!

முதல் முறையாக ஹென்னா பேக் ட்ரை பண்றீங்களா..? நல்ல ரிசல்ட் கிடைக்க இப்படி அப்ளை பண்ணுங்க..!

ஹென்னா ஹேர் பேக்

ஹென்னா ஹேர் பேக்

கருமையான முடிக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹென்னா ஹேர் பேக் எப்படி செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹென்னா என்பது நேச்சுரல் ஹேர் டை ஆகும். முடி மற்றும் தோலுக்கு வண்ணம் தீட்ட மருதாணி பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருதாணி அதாவது ஹென்னா பொதுவாக சிவப்பு நிற டோன்களை உருவாக்குவதோடு தொடர்புடையது என்றாலும், இயற்கையான கருப்பு முடி நிறத்தை உருவாக்கவும் இது பல நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

கருமையான முடிக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹென்னா ஹேர் பேக் எப்படி செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.

ஹென்னா ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

ஹென்னா பவுடர் - 100 கிராம்

காஃபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

1 எலுமிச்சை - சாறு எடுத்து கொள்ளவும்

இயற்கையான முறையில் ஹென்னா பேக் செய்வது எப்படி.?

ஒரு பவுலை எடுத்து கொண்டு அதில் எடுத்து வைத்திருக்கும் ஹென்னா பவுடர் மற்றும் காஃபி பவுடரை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டி மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
பவுலில் இருக்கும் இந்த மிக்சிங்கை திக் பேஸ்ட்டாக மாற்றி கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் இரு பவுடர் மிக்சிங் இருக்கும் பவுலில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். இதன் கன்சிஸ்டென்சி தயிரை போலவே இருக்க வேண்டும்.
இப்போது இந்த கலவையில் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்
பிறகு பவுலை ஒரு மூடி போட்டு மூடி சில மணி நேரம் இந்த மிக்சிங்கை ஊற வைக்கவும். இது ஹென்னா பவுடரில் இருந்து டை அதாவது சாயத்தை ரிலீஸ் செய்ய உதவும்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு மூடி வைத்திருக்கும் பவுலை திறந்து பார்த்தால் அதிலிருக்கும் ஹென்னா பேஸ்ட் ஒரு ஸ்மூத்தான கன்சிஸ்டென்சியை கொண்டிருக்க வேண்டும்.
இந்த நேச்சுரல் ஹென்னா ஹேர் பேக்கை பயன்படுத்தும் முன், உங்கள் தலைமுடியில் இருக்கும் அழுக்கு அல்லது எண்ணெயை நன்கு வாஷ் செய்யவும்.
பிறகு தலைமுடியை காய வைக்கவும். முடி ஓரளவு நன்கு காய்ந்த பிறகு உங்கள் தலைமுடியை பிரித்து, ரெடி செய்து வைத்திருக்கும் ஹென்னா பேஸ்ட்டை முடியின் வேரிலிருந்து நுனி வரை சமமாக தடவவும்.
ஹென்னா பேஸ்ட்டை உங்கள் தலைமுடியின் அனைத்துப் பகுதிகளிலும் தடவியவுடன், பேக் ட்ரை-ஆவதை தடுக்க ஷவர் கேப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியை கவர் செய்து கொள்ளுங்கள்.
ஹென்னா பேக்கை சுமார் 2 - 3 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். நீங்கள் இதை எவ்வளவு நேரம் வைத்திருக்கிறீர்களோ, அவ்வளவு டார்க் கலர் கிடைக்கும். சுமார் 3 மணி நேரம் கழித்து தலைமுடியை ஹென்னா பேக் முழுவதும் போகும் வரை நன்கு அலசி கொள்ளுங்கள். முக்கியமாக இந்த பேக் பயன்படுத்திய அடுத்த 24 மணி நேரம் ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்.
24 மணி நேரம் கழித்து வழக்கம் போல் உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷ்னர் போட்டு வாஷ் செய்யவும்.
ஹென்னா பேக் பயன்படுத்தும் முன் கைகளுக்கு கிளவுஸ் பயன்படுத்தலாம். அதே போல நன்கு காற்றோட்டமான இடத்தில் இந்த பேக் பயன்படுத்துவது முக்கியம். மேலும், உங்கள் தலைமுடியில் ஹென்னா பயன்படுத்தும் முன், உங்களுக்கு அலர்ஜி இல்லை என்பதை உறுதிப்படுத்த பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
First published:

Tags: Hair care, Hair coloring, Hair Mask, Hair Problems