முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்களுக்கு கரு கருன்னு அடர்த்தியான கூந்தல் வேணுமா?... இதை ட்ரை பண்ணுங்க!

உங்களுக்கு கரு கருன்னு அடர்த்தியான கூந்தல் வேணுமா?... இதை ட்ரை பண்ணுங்க!

தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா?... வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க?

தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா?... வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க?

உங்களுக்கு கருமையான மற்றும் அடர்த்தியான கூந்த வேண்டும் என விரும்பினால், இந்த எண்ணெய்யை வீட்டிலேயே தாயார் செய்து உபயோகிக்கவும். ஒரு வாரத்தில் நீங்களே மாற்றத்தை பார்ப்பீர்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று, முடி உதிர்வு மற்றும் முகப்பரு. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாம் உபயோகிக்காத பொருட்கள் இருந்திருக்காது. ஆனால், நமக்கு சரியான தீர்வு கிடைக்காது. தீர்வு கிடைக்காவிட்டாலும் அதை உபயோகிப்பதை நாம் நிறுத்துவதில்லை. எப்போவாது பலன் தெரியாதா என்ற அல்ப ஆசை.

அடர்த்தியான மற்றும் கருமையான முடியை பெற நீங்கள் விரும்பினால், நாங்கள் உங்களுக்கு ஒரு சூப்பரான ஆயில் பற்றி கூறுகிறோம். அது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கிராமங்களில் அதிகம் கிடைக்கும் கரிசலாங்கண்ணி தலைமுடி சம்மந்தமான பிரச்சனைக்கு சிறந்த மூலிகை. கூந்தல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் இந்த தழையை பயன்படுத்தி எண்ணெய் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள் :

கரிசலாங்கண்ணி இலை - 3 கப்.

நல்லெண்ணெய் - 400 மில்லி.

ஏலக்காய் - 10.

செய்முறை :

கரிசலாங்கண்ணி எண்ணெய் செய்வதற்கு முன், எடுத்துக்கொண்ட இந்த இலைகளை தண்டு நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.

பின்னர், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீருடன் இந்த கரிசலாங்கண்ணி இலைகளை சேர்த்து நன்கு அலசி தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். இலைகளில் இருந்து தண்ணீர் முழுமையாக வடியும் வரை காத்திருக்கவும்.

தற்போது மிக்ஸி ஜார் ஒன்றினை எடுத்து, அதில் இந்த கரிசலாங்கண்ணி இலைகளை சேர்த்து கொரகொரவென அரைத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து இதில் ஏலக்காயினை இடித்து சேர்த்து, ஒரு முறை மீண்டும் கொரகொரவென அரைத்துக்கொள்ளவும்.

Also Read | இறந்த சரும செல்களை இயற்கையாக நீக்க ஒரு சூப்பர் பேஸ் பேக்..!

தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு சூடேற்றவும். எண்ணெய் நன்கு காயும் நிலையில் இதில் அரைத்து வைத்த கரிசலாங்கண்ணி சேர்மத்தை சேர்த்து கிளறி விடவும்.

எண்ணெய் நன்கு கொதித்து, கரிசலாங்கண்ணி இலைகள் முழுவதுமாக கரைந்து வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இலைகள் நன்கு கரைந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, எண்ணெய் ஆறும் வரை காத்திருங்கள்.

top videos

    நன்கு ஆறிய இந்த எண்ணெயினை, ஒரு வடிக்கட்டி பயன்படுத்தி எண்ணெயில் உள்ள கசடுகளை நீக்கி தனி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளவும். வாரம் 2 முறை இந்த எண்ணெயினை கூந்தலுக்கு பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

    First published:

    Tags: Hair, Hair loss