நம் அனைவருக்கும் முகப்பரு இல்லாத, மென்மையான சருமத்தை பெற ஆசை. ஆனால், அதற்கான நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. வெறும் பத்து நிமிடம் இருந்தால் போதும், உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?.
சரும ஆரோக்கியத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் ரோஜா மற்றும் புதினா இலைகளை கொண்டு, உங்கள் சரும பிரகாசத்திற்கு உதவும் குளியல் பொடி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரோஜா பூ இதழ்கள் - 1 கப்.
புதினா இலைகளை - 1 கப்.
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி.
கோப்பை - ஒன்று.
ரோஜா - புதினா பேக் செய்முறை :
முதலில் ரோஜா இதழ்கள் மற்றும் புதினா இலைகளை ஒரு கை உரல் அல்லது மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக்கொண்டால் குளியல் கலவை ரெடி.
எப்படி பயன்படுத்துவது?
இந்த பொடியினை உடல் முழுவதும் தடவி ஒரு 30 நிமிடங்களுக்கு உலர விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் குளித்துவிட வேண்டும். வாரம் மூன்று முறை இவ்வாறு குளித்து வர நல்ல மாற்றம் தெரியும்.
எலுமிச்சை சாறு பயன்படுத்துவதால் சிலருக்கு சரும எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தென்படலாம். எனவே, ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சைக்கு மாற்றாய் வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம். பெண்கள் இதோடு கஸ்த்தூரி மஞ்சளும் சேர்த்துக்கொள்ளலாம்.
பயன்கள் :
ரோஜா மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் இந்த கலவையினை சருமத்திற்கு பயன்படுத்த, சருமத்தின் அளவுக்கு அதிகமான எண்ணெய் பசை குறைவதோடு, பொலிவான சருமத்திற்கும் வழிவகுக்கிறது.
Also Read | Maskne என்றால் என்ன.? இதை எப்படி தடுப்பது..? உங்களுக்கான டிப்ஸ்
சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க ரோஜா பூக்கள் பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் ரோஜாவினை சருமத்திற்கு பயன்படுத்தி வர, சரும வறட்சி நீங்கி மிருதுவாக மாறும்.
புதினா ஒரு மூலிகை ஆகும். இந்த மூலிகையின் கிருமிநாசினி பண்பு காணரமாக சருமம் ஆழ்ந்து சுத்தம் செய்யப்படுகிறது. மேலும், இந்த புதினா இலைகள் சருமத்தின் நிறமிகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறுஞ்சி, தெளிவான சருமத்தை பெற எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சையின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு, சரும துளைகளின் மாசுக்களையும் சுத்தம் செய்ய உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Pimple