முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்க உதடு ரொம்ப கருப்பா இருக்கா..? ரோஜா நிறத்தில் மாற இதை ட்ரை பண்ணுங்க!

உங்க உதடு ரொம்ப கருப்பா இருக்கா..? ரோஜா நிறத்தில் மாற இதை ட்ரை பண்ணுங்க!

கருமையன உதட்டை சிவப்பாகும் தக்காளி - மஞ்சள் மாஸ்க்!

கருமையன உதட்டை சிவப்பாகும் தக்காளி - மஞ்சள் மாஸ்க்!

கருமையாக இருக்கும் உங்கள் உதட்டை, செக்க சிவப்பாக மாற்ற வீட்டிலேயே இதை செய்யுங்க போதும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மி பலருக்கும் கருமையான உதடுகள் இருக்கும். அது, ஜீன், புகைப்பிடித்தல், ஆரோக்கிய கோளாறு என பல காரணங்களால் ஏற்படும். ஆனால், அந்த உதட்டு கருமையை போக்க சந்தைகளில் விற்கப்படும் லிப் பாம்கள் அல்லது எண்ணெய்களை பயன்படுத்தியிருப்போம். எவ்வளவு பொருட்களை உபயோகித்தாலும், உதட்டு கருமையில் எந்த மாற்றமும் தெரியாது.

கருமையாக இருக்கும் உதடுகளை இயல்பு நிலைக்கு மீட்டு கொண்டு வரும் உதட்டு மாஸ்க் ஒன்றினை தக்காளி, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 1.

எலுமிச்சை பழம் - 1.

மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்.

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, பின் புழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து தக்காளியை மசித்து தக்காளி சாறு எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு மிக்ஸிங் கோப்பையை எடுத்து அதில் 1/2 மஞ்சள் பொடி மற்றும் 1 ஸ்பூன் அளவுக்கு தக்காளி சாறு சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும்.

இறுதியாக இதனுடன் 1/2 ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விட உதட்டின் கருமையை போக்கும் மாஸ்க் ரெடி.

முறையாக தயார் செய்த இந்த மாஸ்கினை உதட்டுக்கு தடவி 15 - 20 நிமிடங்கள் நன்கு உலர விட்டு பின் குளிர்ந்த நீரில் சுத்தம் செய்துவிடவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

Also Read | எப்போதெல்லாம் பாடி லோஷன் பயன்படுத்துவது அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

பலன்கள் :

சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு எலுமிச்சை சாறுக்கு உள்ளது. அந்த வகையில் எலுமிச்சை சாறு பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த மாஸ்க் ஆனது உதடுகளில் காணப்படும் வறட்சி பிரச்சனையை போக்குகிறது.

ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்ட மஞ்சள் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த மாஸ்க் ஆனது, உதடுகளில் ஏற்படும் வெடிப்பு, பிளவுகளை தடுத்து மிருதுவான உதடுகளை பெற உதவுகிறது.

தக்காளி - எலுமிச்சை சாறு கலவையில் தயார் செய்யப்படும் இந்த பேக்கில் காணப்படும் லைகோபீன், இறந்த செல்களை அகற்றி புதிய திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், சருமத்தின் இயற்கை நிறத்தை மீட்டு தந்து, உதடுகளின் பளபளப்புக்கு உதவுகிறது.

First published:

Tags: Beauty Hacks, Beauty Tips, Lipstick