முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / என்ன செய்தாலும் குதிகால் வெடிப்பு போகலையா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

என்ன செய்தாலும் குதிகால் வெடிப்பு போகலையா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் போக்க இதை செய்யுங்க!!

குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் போக்க இதை செய்யுங்க!!

Foot Crack Remedies in Tamil | ஆண்…பெண் என பாகுபாடு இன்றி அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வெடிப்பு. என்ன செய்தாலும் திரும்ப திரும்ப குதிகால் வெடிப்பு வந்து நம்மை கடுப்பேத்தும். இனி அந்த தொல்லை இல்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வெடிப்பு. இதற்கு காரணம், உடலில் எண்ணெய் சுரப்பிகள் குறைவாக இருப்பதால் தொழில் ஈரப்பதம் குறைந்து வறட்சி மற்றும் வெடிப்புகள் ஏற்படுகிறது. குதிகால் வெடிப்பை சரி செய்ய நாம் பல கிரீம்களை சந்தைகளில் வாங்கி உபயோகித்திருப்போம். சிலருக்கு பலன் கிடைத்திருக்கும், சிலருக்கு கிடைத்திருக்காது.

அப்படியே பலன் கிடைத்திருந்தாலும், கிரீம் பயன்படுத்துவதை நிறுத்தியவுடன் மீண்டு வெடிப்பு வந்திருக்கும். இதற்கு தீர்வே இல்லையா என நினைப்பவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு அருமையான விஷயத்தை கூறுகிறோம். வாருங்கள், சருமத்தை மிருதுவாகவும், சரும நிறத்தை மேம்படுத்த உதவும் பாதாம் கிரீமை வீட்டிலேயே எளிமையான முறையில் கிரீம் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.

பாதாம் கிரீம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

பாதாம் - 15 முதல் 20 பருப்பு.

குங்குமப்பூ- 1 டீஸ்பூன்.

கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்.

ரோஸ் வாட்டர்- 2 டீஸ்பூன்.

வைட்டமின் E - 1 டீஸ்பூன்.

பாதாம் எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில்தண்ணீர் சேர்த்து அதில் பத்தாம் பருப்புகளை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் நன்கு ஊறிய பாதாமின் தோலை நீக்கி தனியே எடுத்து வைக்கவும்.

இப்போது, ஒரு பாத்திரத்தில் குங்குமப்பூ மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கி சிறிது நேரம் மூடி வைக்கவும்.

இதையடுத்து, மிக்ஸி ஜாரில் தோல்நீக்கிய பாதாமை போட்டு, அதனுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக மைபோல அரைக்கவும். க்ரீம் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

இப்போது, ஒரு பாத்திரத்தில் அரைத்த பாதாமை வடிகட்டவும். அதில் குங்குமப்பூ, வைட்டமின்-E, பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவை கெட்டியாக இருந்தால், அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக்கொள்ளலாம்.

Also Read | இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

பின்னர், இதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து, ப்ளெண்டரை பயன்படுத்தி நன்கு கலக்கவும். கிரீம் பதத்திற்கு வந்ததும், இதை ஒரு கண்ணாடி பாட்டிளுக்கு மாற்றவும். இப்போது, பாதாம் மாய்ஸ்சரைசிங் கிரீம் ரெடி. இதை, குளிர்ச்சியான இடத்தில் ஸ்டார் செய்யவும். ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் முகம் மற்றும் கை, கால்களை நன்கு கழுவவும்.

இப்போது, ஈரம் இல்லாமல் கை, கால்களை துடைக்கவும்.

இதையடுத்து, முறையாக செய்து வைத்த பத்தாம் கிரீமை கை மற்றும் கால்களில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

top videos

    இதனை முகத்திலும் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை தடவலாம். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.

    First published:

    Tags: Beauty Hacks, Beauty Tips