முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பொடுகு பிரச்சனைக்கு மூன்றே நாளில் முடிவுகட்ட மருதாணி - எலுமிச்சை ஹேர் மாஸ்க்!

பொடுகு பிரச்சனைக்கு மூன்றே நாளில் முடிவுகட்ட மருதாணி - எலுமிச்சை ஹேர் மாஸ்க்!

பொடுகை விரட்டும் மருதாணி - எலுமிச்சை ஹேர் பேக் பற்றி தெரியுமா?

பொடுகை விரட்டும் மருதாணி - எலுமிச்சை ஹேர் பேக் பற்றி தெரியுமா?

பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. கோடைக்காலத்தில், இந்த பொடுகு பிரச்னை மிகவும் அதிகமாக காணப்படும். இவற்றுக்கு முடிவுகட்ட ஒரு அருமையான ஹேர் மாஸ்க் பற்றி காணலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய இளைஞர்களின் தீராத பிரச்சினைகளில் முடி உதிர்வு, முகப்பரு, பொடுகுத்தொல்லை. இந்த பிரச்சனைகளுக்கு நாம் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, சிகிச்சை எடுத்தாலும் அதற்கான தீர்வு கிடைப்பதில்லை.

பொடுகு பிரச்சனைக்கு, வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, மன அழுத்தம், நுண்ணுயிர் தொற்று மற்றும் பல காரணங்கள் உள்ளது. பொடுகு பிரச்சனையை குறைக்கும் மருதாணி ஹேர் பேக் செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம்.

​தேவையான பொருட்கள் :

மருதாணி பொடி - 4 தேக்கரண்டி.

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி.

சுத்தமான தயிர் - 2 தேக்கரண்டி.

செய்முறை :

ஒரு கோப்பையில் 4 தேக்கரண்டி மருதாணி பொடியை எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் தயிர், எலுமிச்சை சாற்றை தலா 2 தேக்கரண்டி சேர்த்து நன்கு குழைத்து 1 முதல் 2 மணிநேரம் ஊறவைத்து எடுத்தால் மருதாணி ஹேர் பேக் ரெடி.

​எப்படி பயன்படுத்துவது?

குளிப்பதற்கு முன்னதாக, இந்த ஹேர் பேக்கினை தலைக்கு நன்கு தடவி 20 முதல் 30 நிமிடங்களுக்கு அப்படியே ஊற வைக்க வேண்டும். பின்னர், அமிலம் அதிகம் இல்லாத ஷாம்பூவை கொண்டு குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்துவிட வேண்டும். வாரம் 2 முறை இவ்வாறு செய்யலாம்.

பயன்கள் :

தனிப்பயன் அதிகம் கொண்ட மருதாணி, தயிர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஹேர் பேக், பொடுகை விரட்ட உதவுவதோடு பொலிவான கூந்தல் மற்றும் நீளமான கூந்தல் பெறவும் உதவுகிறது.

Also Read | முகப்பருக்கள் குறையணுமா..? இந்த 4 ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவு வகைகள் போதும்..!

மருதாணி ஒரு சிறந்த நோய் நீக்கியாகும். மருதாணி இலைகளில் உள்ள சேர்மங்கள் உடலின் குளிர்ச்சிக்கு உதவுகிறது. மருதாணி இலைகளை சருமம் மற்றும் தலைக்கு பயன்படுத்துவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

சிட்ரஸ் பழமான எலுமிச்சை பழத்தை தலைக்கு பயன்படுத்த, பித்த பிரச்சனைகள் நீங்குகிறது. மேலும், இதன் கிருமிநாசினி பன்புகள் தொற்றுகளால் ஏற்படும் பொடுகு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.

குறிப்பு : ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் இயற்கை பொருட்களை தலைக்கு பயன்படுத்துகையிலும் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே, அழகு குறிப்புகளை பயன்படுத்தும் முன், மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

First published:

Tags: Beauty Hacks, Beauty Tips