முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முகம் பளிச்சென ஜொலிக்கனுமா? - வெறும் 10 நிமிஷம் போதும்... இதை ட்ரை பண்ணுங்க!

முகம் பளிச்சென ஜொலிக்கனுமா? - வெறும் 10 நிமிஷம் போதும்... இதை ட்ரை பண்ணுங்க!

இந்த 2 பொருள் இருந்தா போதும் 10 நிமிசத்துல பளிச்சுனு ஆகிடலாம்!!

இந்த 2 பொருள் இருந்தா போதும் 10 நிமிசத்துல பளிச்சுனு ஆகிடலாம்!!

முகத்தில் உள்ள அழுக்கை அகற்றி பளிச்சிடும் வெண்மையை பெற இதை மட்டும் செய்தால் போதும். 100 பேருக்கு நடுவில் நின்னாலும் பளிச்சுனு தெரிவீங்க.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் அனைவருக்கும் பருக்கள் இல்லாத பளபளப்பான ஆரோக்கியமான சருமம் வேண்டும் என ஆசைப்படுவோம். ஆனால், என்ன தெரிந்தாலும் அப்படிப்பட்ட பலனை நாம் பெறுவதில்லை. அதே போல நாம் எவ்வளவு க்ரீம்களை உபயோகித்தாலும் நமது முகத்தில் உள்ள அழுக்குகள் முழுவதுமாக போவதில்லை. ஆனால், நாங்கள் இதற்கு எங்களிடம் ஒரு சிறந்த தீர்வு உள்ளது.

நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் காஃபி மற்றும் கடலைமாவு பொருட்களை கொண்டு உங்கள் சருமத்தை பராமரிக்கும் ஒரு எளிமையான ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிப்பது என இங்கே காணலாம்.

காபி ஃபேஸ் பேக்…

காபியை ஃபேஸ் பேக், ஸ்க்ரப் என பல வகையில் முகத்திற்கு பயன்படுத்தலாம். இது நம் முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்கும் உதவுகிறது. காஃபியை வைத்து ஃபேஸ் பேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காபி தூள் - 1 டீஸ்பூன்.

எலுமிச்சை சாறு - 6 முதல் 7 சொட்டுகள்.

சர்க்கரை - 1 டீஸ்பூன்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் காபி தூள், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

Also Read | பொடுகு தொல்லைக்கு ஒரே வாரத்தில் தீர்வு - இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க!

இப்போது அதை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் நன்கு உலர விடவும். பின்னர், இதை குளிர்ந்த நீரை கொண்டு சுத்தம் செய்யவும். குளிப்பதற்கு முன்னும் இதை பயன்படுத்தலாம்.

இதை வாரத்தில் 3 நாட்கள் பயன்படுத்தினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மறைந்து சருமம் பொலிவு பெரும்.

கடலை மாவு ஃபேஸ் பேக் :

எல்லார் வீட்டிலும் இயல்பாக இருக்கும் பொருட்களில் ஒன்று, கடலை மாவு. இதை வைத்து முகத்தில் உள்ள அழுக்குகளை எளிதில் சுத்தம் செய்யலாம். கடலை மாவை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1 டீஸ்பூன்.

வேப்ப எண்ணெய் - 5 துளிகள்.

தயிர் - 1 டீஸ்பூன்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு, தயிர் மற்றும் வேப்ப எண்ணெய் கலந்து கொள்ளவும். நன்கு கலந்த பின்பு உங்கள் முகத்தில் தடவவும். முகத்தில் 10 நிமிடம் வைத்துவிட்டு, பிறகு அதனை கழுவவும். வாரத்திற்கு 3 முறை உபயோகித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

First published:

Tags: Beauty Hacks, Beauty Tips, Coffee, Skin Care