முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆன்லைனில் பார்க்கும் அனைத்தையும் சருமத்தில் அப்ளை செய்ய வேண்டாம்..! எச்சரிக்கும் பிரபல தோல் மருத்துவர்..

ஆன்லைனில் பார்க்கும் அனைத்தையும் சருமத்தில் அப்ளை செய்ய வேண்டாம்..! எச்சரிக்கும் பிரபல தோல் மருத்துவர்..

ஸ்கின்கேர் ஹேக்ஸ்

ஸ்கின்கேர் ஹேக்ஸ்

நாம் உணவாக சாப்பிடும் அனைத்தையும் நம் முகத்தில் வைக்க முடியாது. உங்கள் முகத்தில் மிளகாய் அல்லது இலவங்கப்பட்டையை பயன்படுத்த முடியமா.! முகம் எரியும் அல்லவா..

  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே முயற்சிக்க கூடிய பல நிவாரண டிப்ஸ் சோஷியல் மீடியாக்களில் இருக்கின்றன. இவற்றில் பல சிறந்த முடிவுகளை அளிக்கின்றன. என்றாலும் சரும பிரச்சனைகளை சரி செய்ய ஆன்லைன் ஹேக்ஸ்களை முழுவதுமாக நம்ப வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரபல சரும மருத்துவரான கீதிகா மிட்டல் குப்தா தனது சோஷியல் மீடியாவில், "மிகவும் ஆபத்தான டிக்டாக் ட்ரெண்ட்ஸ்" என்ற கேப்ஷனில் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானது, ஒருவருக்கு வேலை செய்யும் ஹேக்ஸ் உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம். ஒருவேளை உங்களுக்கு சருமத்தில் பிரச்சனைகள் இருந்தால், ஆன்லைன் ஹேக்ஸ்களை முயற்சிப்பதற்கு பதில் மருத்துவரிடம் செல்லுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

சருமத்தில் இருக்கும் பிளாக்ஹெட்ஸை போக்க உதவும் என்று கூறப்படும் ட்ரிக் பற்றி கூறியுள்ள கீதிகா மிட்டல், மூக்கில் பிளாக்ஹெட்ஸ் இருப்பது மிகவும் பொதுவானது. ஆனால் உங்களுக்கு போர் ஸ்ட்ரிப்ஸ் தேவையில்லை, ஏனெனில் அவை உங்கள் சருமத்தில் ஹார்ஷாக இருக்கும். எனவே அதற்கு பதிலாக, சாலிசிலிக் ஆசிட் அல்லது பிற ஆசிட் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்தி பிளாக்ஹெட்ஸ்களை அகற்ற பரிந்துரைக்கிறார்.

மேலும், ஹைட்ரா-ஃபேஷியல் போன்ற சிகிச்சைகள் பிளாக்ஹெட்ஸை நீக்க சரியாக வேலை செய்கின்றன தவிர உங்கள் சருமத்தின் வகை மற்றும் தேவைகளின் அடிப்படையில் சரியான தயாரிப்புகள் அல்லது சிகிச்சைகளை பரிந்துரைக்கும் ஒரு தோல் மருத்துவரை அணுகுவதே பிளாக்ஹெட்ஸை நீக்குவதற்கான தீர்வை கண்டறிய எளிய வழி என்றும் குறிப்பிட்டுள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by Dr Geetika Mittal Gupta (@drgeetika)



ஹோம் மேட் காஃபி மாஸ்க்ஸ் : காஃபி ஸ்க்ரப்கள் இறந்த சரும செல்களை அகற்ற மற்றும் சருமத்தை பிரகாசமாக வைக்க சிறந்தது, ஆனால் அடிக்கடி கரடுமுரடான காஃபி ஸ்க்ரப் பயன்படுத்துவது கண்களுக்குக் கீழே, அக்குள் அல்லது முகம் போன்ற சென்சிட்டிவான சருமத்தில் சிராய்ப்பை ஏற்படுத்தும்.

இயற்கை உணவுப் பொருட்கள்: மஞ்சள் போன்ற இயற்கை ட்ரெடிஷ்னல் ப்ராடக்ட்ஸ்களுக்கு பதிலாக இயற்கையான சரும பராமரிப்பை செய்ய ஏராளமான காரணங்கள் உள்ளன, ஆனால் நாம் உணவாக சாப்பிடும் அனைத்தையும் நம் முகத்தில் வைக்க முடியாது. உங்கள் முகத்தில் மிளகாய் அல்லது இலவங்கப்பட்டையை பயன்படுத்த முடியமா.! முகம் எரியும் அல்லவா.. எனவே சாப்பிடும் பொருட்கள் அனைத்தையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை நான் பரிந்துரைக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார் கீதிகா மிட்டல்.

DIY சிகிச்சையிலிருந்து ஏன் விலகி இருக்க வேண்டும்?

பிரபல காஸ்மெடிக் டெர்மட்டாலஜி நிபுணர் கல்பனா சாரங்கி பேசுகையில், சருமத்திற்கான சுய வைத்தியம் தோலில் தொற்றுகள், பிக்மென்டேஷன் அல்லது தீவிர முகப்பருவை ஏற்படுத்தக்கூடும், நிரந்தர வடுவுக்கு கூட வழிவகுக்கும். குறிப்பாக பிளாக்ஹெட்ஸ்களுக்கு எதிரான ஆன்லைன் ஹேக்ஸ்கள் ஆபத்தானவை, ஏனெனில் அவை உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் என்று கூறினார். உதாரணமாக சில DIY சிகிச்சை டிப்ஸ்களில் பேக்கிங் சோடா அல்லது எலுமிச்சை ஜூஸ் பயன்படுத்தப்படுகிறது, இது மிகவும் அசிட்டிக்கான மற்றும் உங்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்த கூடிய டிப்ஸாக இருக்கலாம் என்றார்.

Also Read | Maskne என்றால் என்ன.? இதை எப்படி தடுப்பது..? உங்களுக்கான டிப்ஸ்

உண்மையில் பிளாக்ஹெட்ஸ்களை எதிர்த்துப் போராட உதவும் விஷயங்கள்:

பிரபல டெர்மட்டாலஜி நிபுணர் ஸ்வப்னா பிரியா கூறுகையில் மென்மையான க்ளென்சிங், எக்ஸ்ஃபோலியேஷன், மாய்ஸ்ரேஷன் உள்ளிட்ட சீரான தோல் பராமரிப்பு வழக்கம் பிளாக்ஹெட்ஸ்களை போக்க உதவும். ஒரு நாளைக்கு 2 முறை லேசான க்ளென்சரைக் கொண்டு சருமத்தை சுத்தப்படுத்துவது சருமத்தில் இருக்கும் அசுத்தங்களை அகற்ற உதவும் என்கிறார்.

சாலிசிலிக் ஆசிட், பென்சாயில் பெராக்சைடு அல்லது ரெட்டினாய்ட்ஸ் போன்ற டாபிக்கல் ட்ரீட்மென்ட்ஸ் போர்ஸ்களை அன்க்ளாக் செய்து பிளாக் ஹெட்ஸ்களை குறைக்க உதவும். சாலிசிலிக் ஆசிட் ஒரு பீட்டா-ஹைட்ராக்ஸி ஆசிட் ஆகும். இது போர்ஸ்களுக்குள் ஊடுருவி, pore lining-ஐ வெளியேற்றி, எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் சருமத்தில் குவிவதை குறைக்கும் என்றார் ஸ்வப்னா பிரியா. கெமிக்கல் பீல்ஸ், மைக்ரோடெர்மாபிரேஷன் அல்லது எக்ஸ்ட்ராக்ஷன்ஸ் போன்ற தொழில்முறை சிகிச்சைகள் பிளாக்ஹெட்ஸ்களை திறம்பட நீக்கி அவை மீண்டும் வருவதை தடுக்க உதவும் என்றும் நிபுணர் குறிப்பிட்டார்.

First published:

Tags: Beauty Tips, Blackheads, Skincare