முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முகப்பரு பிரச்னைக்கு முடிவுகட்டும் காஃபி தூள் - மஞ்சள்.. வீட்டிலேயே செய்யுங்க முக கிரீம்!

முகப்பரு பிரச்னைக்கு முடிவுகட்டும் காஃபி தூள் - மஞ்சள்.. வீட்டிலேயே செய்யுங்க முக கிரீம்!

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் காஃபி - மஞ்சள் பேஸ் பேக்!

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் காஃபி - மஞ்சள் பேஸ் பேக்!

நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முக்கப்பரு பிரச்னை இல்லாத மனிதர்களை காண்பது அரிதான விஷயம். ஏனென்றால், அனைவரும் பருக்கள் இல்லாத ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புகிறார்கள். அதற்காக நாம் பல ஆயிரக்கணக்கு செலவில் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.

ஆனால், நாம் சரியான முடிவை பெறுவதில்லை. நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் மூன்றே நாளில் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என உங்களுக்கு தெரியுமா?. முகத்தில் உள்ள பருக்களை குறைத்து பொலிவான சருமம் பெற உதவும் பேஸ் பேக் ஒன்றினை காஃபி பொடி, தயிர் மற்றும் மஞ்சள் பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

காஃபி கொட்டை - 3 ஸ்பூன்.

தயிர் - 2 ஸ்பூன்.

மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்.

செய்முறை :

முதிலில் எடுத்துக்கொண்ட காஃபி கொட்டையினை நன்கு உலர வைத்து, பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

தொடர்ந்து, போதுமான அளவு கோப்பை ஒன்றை எடுத்து அதில் காஃபி பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.

இறுதியாக இதனுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கரைத்துக்கொள்ள பருக்களை விரட்டும் பேஸ் பேக் ரெடி.

இப்போது, உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். பின்னர், முகத்தை ஈரம் இல்லாமல் ஒரு துணியை வைத்து துடைக்கவும்.

முறையாக தயார் செய்த இந்த பேக்கினை முகம் மற்றும் கழுத்து பகுதிக்கு தடவி மாசாஜ் செய்யவும். பின் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சுத்தம் செய்துவிடவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

பயன்கள் :

சரும துளைகளில் அடைந்திருக்கும் இறந்த செல்களை அகற்றும் பண்பு காஃபி பொடிக்கு உள்ளது. அந்த வகையில் காஃபி பொடி பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது, இறந்த செல்களை நீக்கி பொலிவான சருமம் பெற உதவுகிறது.

Also Read | மோர் முதல் மீன் வரை... பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்.!

தயிர் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது, சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. அந்த வகையில் சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை போக்கி, மிருதுவான - மென்மையான சருமம் பெற இந்த பேக் உதவுகிறது.

top videos

    ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்ட மஞ்சள் - காஃபி பொடி கொண்டு தயார் செய்யப்படும் இந்த பேஸ் பேக் ஆனது, சரும துளைகளில் அடைந்திருக்கும் மாசுக்களை அகற்றி, பருக்களின் அளவை குறைக்கிறது.

    First published:

    Tags: Acne, Beauty Tips, Nature Beauty, Pimple