ஆண், பெண் என பாகுபாடு இன்றி அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு. இந்த பிரச்சனைகளுக்கு சந்தையில் பல்வேறு எண்ணெய்கள் விற்பனை செய்யப்பட்டாலும். அவை என்னவோ நமக்கு சரியான முடிவுகளை வழங்குவதில்லை. அப்போ, என்ன தான் இதற்கு தீர்வு என வேறு தீர்வுகளை நீங்கள் தேடுபவராக இருந்தால், நாங்க உங்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு ஹேர் மாஸ்க் பற்றி கூறுகிறோம்.
நீளமான மற்றும் கருமையான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எளிமையான ஹேர் மாஸ்க் ஒன்றினை வீட்டிலேயே, மிகவும் குறைந்த நேரத்தில் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி.
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி.
விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை :
முதலில், ஹேர் மாஸ்க் செய்ய எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த இந்த சேர்மத்தை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளவும். பின்னர் இதனுடன் இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்தால், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஹேர் மாஸ்க் ரெடி.
எப்படி பயன்படுத்துவது?
தலைக்கு குளிக்கச் செல்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், இந்த பேஸ்டினை தலை மற்றும் கூந்தல் பகுதிக்கு தேய்த்து மசாஜ் செய்து, 30 நிமிடம் உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க நல்ல மாற்றம் தெரியும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
பயன்கள் :
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி கூந்தலின் இயற்கை நிறத்தை மீட்டு தருகிறது. அந்த வகையில் கறிவேப்பிலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த ஹேர் பேக் கருமையான கூந்தல் பெற உதவுகிறது.
ஹேர் பேக்கில் நாம் பயன்படுத்தும் கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவை கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு கொண்டது. அந்த வகையில் கூந்தல் வறட்சி போன்ற பிரச்சனைகளை நீக்க இந்த ஹேர் மாஸ்க் உதவுகிறது.
Also Read | வெயில் காலத்தில் ஆய்லி ஸ்கின்னை எப்படி பராமரிப்பது.? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்..!
ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் அதிகம் நிறைந்த விளக்கெண்ணெயினை இந்த ஹேர் மாஸ்கில் பயன்படுத்தும் நிலையில் இது, பித்தநரை, இளநரை பிரச்சனைகளை போக்குவதோடு பொலிவான கூந்தலை பெற உதவுகிறது.
கொத்தமல்லி - ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த ஹேர் மாஸ்க், உச்சந்தலையின் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவி வலுவானு முடி வேர் கால்களுக்கு உதவுகிறது. அந்த வகையில், நீளமான கூந்தல் பெற இந்த ஹேர் மாஸ்க் உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair care, Hair fall, Hair growth