முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வைரம் போல் பிரகாசிக்கும் அழகை பெற கேரட் ஃபேஸ் பேக்.. எப்படி செய்ய வேண்டும்..?

வைரம் போல் பிரகாசிக்கும் அழகை பெற கேரட் ஃபேஸ் பேக்.. எப்படி செய்ய வேண்டும்..?

வைரம் போல ஜொலிக்கும் முகத்திற்கு கேரட் ஃபேஸ் பேக்…!

வைரம் போல ஜொலிக்கும் முகத்திற்கு கேரட் ஃபேஸ் பேக்…!

கேரட் ஃபேஸ் மாஸ்க் உங்களுக்கு பளபளப்பான மற்றும் களங்கமற்ற சருமத்தை வழங்குகிறது. இது உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உங்கள் முகத்திற்கு புது பொலிவை கொடுக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் அனைவருக்கும் மரு அற்ற ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புவோம். ஆனால், அதற்கு என்ன செய்வது என தெரியாமல் சந்தைகளில் விற்கப்படும் கிரீம்களை ஆயிரக்கணக்கில் செலவு செய்து உபயோகிப்போம். ஆனால், நமது வீட்டில் இருக்கும் ஒரே ஒரு பொருளை கொண்டு உங்கள் முகத்தை வைரம் போல ஜொலிக்க வைக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?

உடல் ஆரோக்கியத்திற்கு அதிகமாக உதவும் கேரட்கள், நம் சரும பொலிவுக்கும் பல நன்மைகளை கொடுக்கிறது. அந்த வகையில் கேரட் கொண்டு ஃபேஸ் பேக் எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம். இது, ஆயில், ட்ரை என அனைத்து வகையான சருமத்திற்கும் நல்ல பலனை கொடுக்கிறது.

தேவையான பொருட்கள் :

கேரட் - 4.

தேன் - 1/2 தேக்கரண்டி.

ஆலிவ் எண்ணெய் - 1/2 தேக்கரண்டி.

எலுமிச்சை சாறு - எட்டு துளிகள்.

செய்முறை :

பசுமையான கேரட்கள் சிலவற்றை எடுத்து, நன்கு தோலுரித்து அதனை, இட்லியை அவிப்பது போல் நீராவியில் நன்கு அவிக்க வேண்டும். பின்னர் இதனை கூழ்ம நிலைக்கு மசிக்க வேண்டும்.

இதனுடன் 1/2 தேக்கரண்டி தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்ந்த நன்கு கலக்க வேண்டும். சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்குகளை போக்க இந்த ஆலிவ் எண்ணெய் உதவும்.

இதையடுத்து, இந்த சேர்மத்துடன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள் 8 துளிகளும், எண்ணெய் சருமம் கொண்வர்கள் ஒரு தேக்கரண்டி வரையிலும் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம்.

எலுமிச்சை சாறு சேர்த்தப்பின் இந்த கலவையின் கெட்டித்தன்மை அதிகரிக்கும். எனவே, முகத்திற்கு பயன்படுத்தும் கூழ்ம நிலைக்கு கொண்டுச்செல்ல கூடுதலாக ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

Also Read | இந்த சம்மருக்கு குளுகுளுனு சருமத்தை வச்சுக்க தயிர் ஃபேஸ் ஸ்கிரப் டிரை பண்ணுங்க..!

பின்னர் இந்த கலவையினை குளிர்ச்சியான இடத்தில் வைத்து சற்று ஆறவிடுங்கள். இந்த சேர்மத்தை வெதுவெதுப்பான சூட்டில் பயன்படுத்துவது சரியான ஃபேஸ் பேக்கிற்கு உதவாது.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர், ஒரு சுத்தமான துணி கொண்டு உங்கல் முகத்தை ஈரம் இல்லாமல் துடைக்கவும்.

முகத்தை நன்கு சுத்தம் செய்த பின், இந்த கேரட் கலவையினை முகத்திற்கு அப்படியே அப்ளை செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால் உங்கள் கழுத்து பகுதிக்கும் தடவலாம்.

top videos

    சருமத்தில் இந்த கலவையை உபயோகிக்கும் போது, கீழிருந்து மேலாக தடவவும். 10 முதல் 15 நிமிடங்களுக்கு இந்த பேக்கினை முகத்தில் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். முகம் உலர்ந்த பின்னர் உங்களுக்கு பிடித்த மாய்ஸ்சரைசரை நீங்கள் பயன்படுத்தலாம்.

    First published:

    Tags: Beauty Tips, Carrot, Pimple