முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முக சுருக்கம் பற்றிய கவலையா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க இளமையா தெரிவீங்க..!

முக சுருக்கம் பற்றிய கவலையா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க இளமையா தெரிவீங்க..!

தோல் சுருக்கங்கள் நீங்கி இளமையாக தெரிய பன்னீர் ஃபேஸ் பேக்!

தோல் சுருக்கங்கள் நீங்கி இளமையாக தெரிய பன்னீர் ஃபேஸ் பேக்!

homemade paneer face pack for glowing skin | சருமத்தின் வறட்சியைப் போக்க, பனீர் ஃபேஸ் பேக் சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் குறையத் தொடங்கும். பனீர் ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை சில நிமிடங்களில் பளபளப்பாகவும், தெளிவாகவும் மாற்றும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

Everyday Glowing Skin Face Pack | நம்மில் பலருக்கும் பிடித்த உணவுப்பொருட்களில் ஒன்று பனீர். இதன் பெயரைக் கேட்டாலே பலரின் நாவில் எச்சில் சுரக்கும். பனீர் சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. இதை பச்சையாகவும் எடுத்துக்கொள்ளலாம். பனீரை வித விதமாக சமைத்து சாப்பிடலாம் என அனைவருக்கும் தெரியும். ஆனால், பனீரை அழகு பொருட்களாகவும் பயன்படுத்துதலாம் என்பது உங்களுக்கு தெரியுமா..?

முகத்தில் பனீரை பயன்படுத்துவதால் முகம் பளபளப்பதோடு, பல முக பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது. பாலாடைக்கட்டியுடன் சில வீட்டுப் பொருட்களைக் கலந்து ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தி வந்தால் முகத்தை பளபளப்பாக மாற்றலாம். அந்தவகையில், தோல் சுருக்கங்கள் நீங்கி இளமையாக தெரிய பனீர் பேஸ் பேக் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பனீர் - 50 கிராம்.

தேன் - 1 ஸ்பூன்.

எலுமிச்சை - 1 ஸ்பூன்.

வைட்டமின்-E காப்ஸ்யூல் - 2.

செய்முறை :

முதலில், கோப்பை ஒன்றை எடுத்து அதில் பனீர் சேர்த்து மசித்துக்கொள்ளவும்.

பின்னர், இதனுடன் இந்த எலுமிச்சை சாறை கலந்துக்கொள்ளவும்.

இப்போது, இதில் போதுமான அளவு தேன் சேர்த்து நன்கு மைபோல கலக்கவும்.

இதையடுத்து, பனீர் பேஸ்டில் வைட்டமின் E எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை மூடி, 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஏனென்றால், நாம் சேர்த்த அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.

இதையடுத்து, ஈரம் இல்லாமல் முகத்தை நன்கு துடைக்கவும்.

இப்போது, முறையாக தயார் செய்த இந்த ஃபேஸ் பேக்கினை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

இதை 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.

Also Read | இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..!

இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றம் தெரியும். முகத்தில் உள்ள புள்ளிகளை குணப்படுத்துவதுடன், சருமமும் பளபளப்பாக மாறும்.

பயன்கள் :

எலும்பிச்சையில் கிருமி நாசினிப் பண்பு உள்ளது. இது சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்து, பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.

சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு தேனுக்கு இருக்கும் நிலையில், தேன் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேக் சரும வறட்சி பிரச்சனைகளை போக்குகிறது. அதோடு, தேனில் அழற்சி எதிர்ப்பு பண்பும் அதிகம்.

ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த பனீர், ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுவதோடு, இளமை தோற்றத்தை மீட்டு தருகிறது. முக சுருக்கத்தை குறைக்கவும் இது உதவும்.

First published:

Tags: Beauty Tips, Bridal skincare, Paneer