முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயில் காலத்திலும் உங்கள் முகம் ஜொலிக்க வாழைப்பழ பேஸ்பேக்!

வெயில் காலத்திலும் உங்கள் முகம் ஜொலிக்க வாழைப்பழ பேஸ்பேக்!

ஜொலிக்கும் சருமத்திற்கு உதவும் ஆப்பிள் - வாழைப்பழ பேஸ்பேக்!

ஜொலிக்கும் சருமத்திற்கு உதவும் ஆப்பிள் - வாழைப்பழ பேஸ்பேக்!

முகத்தில் கரும்புள்ளி இல்லாமல் அழகாக தெரிய வாரம் இரண்டு முறை இந்த பேஸ்பேக்கை யூஸ் பண்ணுங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முகப்பரு, கரும்புள்ளி இல்லாத ஆரோக்கியமான சருமத்தை பெற அனைவருக்கும் ஆசை. அதுவும், கோடைக்காலம் என்றால் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று. நீங்கள் பட்டுப்போன்ற சருமத்தை பெறவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் நாங்கள் ஒரு பேஸ்பேக் பற்றி கூறுகிறோம்.

சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்கி பிரகாசமான சருமம் பெற உதவும் பேஸ்பேக் ஒன்றினை ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் தயிர் பயன்படுத்தி செய்வது எப்படி என இங்கு காணலாம்.

​தேவையான பொருட்கள் :

ஆப்பிள் - 1.

வாழைப் பழம் - 1.

தயிர் - 1/2 கப்

செய்முறை :

பேஸ்பேக் செய்வதற்கு முன்னதாக, ஆப்பிள் பழம் ஒன்றினை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

இதேப்போன்று, நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்றினை எடுத்து, தோல் நீக்கி, பின்னர் பொடியாக நறுக்கி வைக்கவும்.

தற்போது ஒரு மிக்ஸி ஜாரில், பொடியாக நறுக்கிய வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் இதனுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ள பேஸ்பேக் ரெடி.

​எப்படி பயன்படுத்துவது?

முறையாக தயார் செய்த இந்த பேக்கினை, கழுத்து மற்றும் முகத்திற்கு அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு உலர விட்டு, குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்துவிடவும்.

பயன்கள் :

சரும தளர்வுகளை கட்டுப்படுத்தும் பண்பு ஆப்பிளுக்கு உள்ளது. அந்த வகையில் ஆப்பிள் கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த பேஸ்பேக், சரும சுருக்கங்கள், மென் கோடுகளை மறைத்து இளமை தோற்றத்தை மீட்டு தருகிறது.

Also Read | வியர்க்குருவை இயற்கையாக விரட்ட உதவும் பாட்டி வைத்தியங்கள்..!

வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ நிறைந்த வாழைப்பழம் சருமத்தின் இயற்கை நிறத்தை மீட்டு தர உதவுகிறது. அந்த வகையில் இந்த பேஸ் பேக் சரும பொலிவினை உறுதி செய்கிறது.

top videos

    பேஸ்பேக்கில் நாம் பயன்படுத்தும் தயிர், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைப்பதோடு, சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்குகிறது. அந்த வகையில் இந்த பேஸ்பேக், மிருதுவான சருமம் பெற உதவுகிறது.

    First published:

    Tags: Beauty Hacks, Beauty Tips, Food, Pimple