தற்போதைய இளைஞர்களின் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பருக்கள். நம்மில் பலருக்கும் மாசு, மரு அற்ற சருமத்தை பெற ஆசையாக இருக்கும். ஆனால், நமது வாழ்க்கை முறை காரணமாக நாம் பல சரும பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். அந்தவகையில் உங்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் சாக்லேட் மற்றும் முல்தானி ஃபேஸ் பேக் பற்றி நாங்கள் கூறுகிறோம். இது உங்களால எப்போதும் இளைமையாக காட்டுவதுடன், உங்கள் முகத்தை மேன்மையாகவும் வைக்க உதவும்.
தேவையான பொருட்கள் :
கொக்கோ பவுடர் - 1/4 கப்.
முல்தானி மெட்டி - 2 ஸ்பூன்.
தயிர் - 2 ஸ்பூன்.
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்.
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்.
செய்முறை :
முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் முல்தானி மெட்டி மற்றும் கொக்கோ பவுடரை சேர்த்த நன்கு கலக்கி கொள்ளவும்.
இதை தொடர்ந்து, இதில் சிறிது தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள சரும சுருக்கத்தை போக்கும் பேஸ் பேக் ரெடி.
எப்படி பயன்படுத்துவது?
முதலில், உங்கள் முகத்தை சோப் வைத்து கழுவவும். பின்னர், முகத்தை ஈரம் இல்லாமல் துணி வைத்து துடைக்கவும்.
இப்போது, முறையாக தயார் செய்த இந்த பேஸ் பேக்கினை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு உலர விடவும்.
பின்னர், குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்யவும். இதை வாரம் 2 முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Also Read | கோடைக்காலத்தில் மேக்கப் கலையாமல் இருப்பதற்கான டிப்ஸ்!
பயன்கள் :
கொக்கா பவுடர் மற்றும் முல்தானி மெட்டி உள்ள இந்த பேஸ் பேக், சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் மற்றும் மென்கோடுகளை குறைத்து எப்போதும் இளமை தோற்றத்தை தர உதவுகிறது.
இதை பயன்படுத்தியுள்ள கொகோ பவுடர், சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில் இந்த பேஸ் பேக் பொலிவான சருமம் பெறவும் உதவுகிறது.
இதில், பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்ட எலுமிச்சை சாறு பயன்படுத்தப்படுவதால், சருமத்தில் உண்டாகும் பருக்களின் பரவலை இது கட்டுப்படுத்தும்.
இந்த பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தயிர் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டது. அந்த வகையில் இந்த பேஸ்பேக் சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்யும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Facial, Skin Care