கோடைக்காலம் தொடங்கினாலே வெயிலின் தாக்கத்திலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தான் யோசிப்போம். அதிலும் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் 105 டிகிரிக்கு மேல் வெளுத்து வாங்குகிறது. பணிக்காக வெளியில் சென்றால் கூட எப்படா? வீட்டிற்கு வருவோம் என்ற மனநிலை தான் உள்ளது. வீட்டிற்கு வந்தாலும் ஒரு நிமிடம் கூட பேன் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. அந்தளவிற்கு வெயிலின் உஷ்ணம் உள்ளது.
இதுப்போன்ற நேரத்தில் உங்களது உடல் மற்றும் சருமத்தில் முகப்பரு, எரிச்சல் போன்ற பல தோல் பிரச்னைகள் வராமல் பாதுகாக்க முயற்சி செய்வோம். நல்ல சன் ஸ்கிரீன் லோஷன், கற்றாழை ஜெல் மற்றும் ஃபேஸ் மிஸ்ட் ஆகியவை உடனடி நிவாரணம் பெற உங்களுக்கு உதவுகின்றன. ஆனால் உண்மையில் உங்களது சருமத்தை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், உங்களுக்கு உள்ளார்ந்த ஊட்டச்சத்து அவசியம். இதற்காகத் தான் பெரும்பாலான மக்கள் வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சைக் கொண்டு தயாரிக்கும் பானத்தை அதிகளவில் பயன்படுத்துகிறார். இதனால் என்னென்ன நன்மைகள்?என நாமும் இங்கே அறிந்துக்கொள்வோம்.
வெள்ளரிக்காய் எலுமிச்சைப் பழத்தின் நன்மைகள்: வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, குறிப்பாக கோடைக்காலத்தில் இவற்றின் மூலம் செய்யப்படும் ஜூஸ் உங்களுக்கு நொடியில் உடலை ஹைட்ரேட் செய்யவும், சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்தாகவும் அமைகிறது. பொதுவாகவே வெள்ளரிக்காயில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள், போலிக் அமிலம் மற்று் வைட்டமின்சி நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் கொண்ட வெள்ளரியை நீங்கள் உபயோகிக்கும் போது, உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி செல்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றது. இதோடு வைட்டமின் சி உடலில் புதிய செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Also Read | லெமன் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்!
வெள்ளரி மற்றும் எலுமிச்சை பானம்:
இதே போன்று தான் எலுமிச்சையிலும் சரும பராமரிப்பிற்கான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதைத் தவிர, எலுமிச்சையில் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்களும் (AHA) உள்ளது. இது இறந்த சரும செல்களை வெளியேற்ற உதவும். இது ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கிறது மற்றும் சருமத்தை உள்ளே இருந்து வளர்க்கிறது.
எனவே தான் கோடைக்கால வெயிலால் உங்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைக்கு வெள்ளரி மற்றும் எலுமிச்சைக் கொண்டு செய்யும் பானம் உதவியாக உள்ளது. இதோ வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்யலாம் என இங்கே அறிந்துக்கொள்வோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cucumber, Lemon juice, Summer Skincare Tips