நம்முடைய வாழ்வில் ஒரு கட்டத்திற்கு மேல் முதுமை என்பது கட்டாயம் எதிர்கொண்டே ஆக வேண்டிய நேச்சுரல் ப்ராசஸ் ஆகும். இளமையாக இருப்பது என்பது நம்முடைய மனதில் இருந்து தொடங்குகிறது என்கிறார்கள் நிபுணர்கள். வயதாகும் செயல்முறை என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத நேச்சுரல் ப்ராசஸ் தான் என்றாலும் சிறப்பான வாழ்க்கை முறை மற்றும் சில எளிய உதவி குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி கொண்டே வருவது, உங்களுக்கு வயதாகும் போது நீங்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக மற்றும் இளமையாக இருக்க உதவும்.
வயது ஏறினாலும் கூட உங்களை நீண்ட காலத்திற்கு இளமையாக வைத்திருக்கும் சில பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. அந்த வகையில் நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க உதவும் முக்கிய பழக்கவழக்கங்கள் என்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
உங்கள் சருமம் எப்போதுமே ஹைட்ரேட்டாக மற்றும் சாஃப்டாக இருக்க வேண்டுமா.! இதற்கு சிறந்த வழி தினசரி நிறைய தண்ணீர் குடிப்பதில் கவனம் செலுத்துங்கள். நிபுணர்களின் பரிந்துரைப்படி தினசரி 3 - 3.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்களை ஆரோக்கியமாக மட்டுமல்ல, இளமையாக வைக்கவும் உதவும்.
தினசரி 7 - 8 மணி நேரம் போதுமான அளவு தூங்குவது உங்களது எனர்ஜி லெவலை மீட்டெடுக்க உதவும். போதுமான தூக்கம் உடல் மற்றும் அறிவாற்றல் சேதங்களை குணப்படுத்துவதோடு, உங்களை இளமையாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எப்போது வெளியில் சென்றாலும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் மற்றும் தலைக்கு தொப்பிகளை பயன்படுத்துங்கள். வெயிலுக்கு ஏற்ற காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.
ரெட்டினோல், வைட்டமின் சி மற்றும் ஹைலூரோனிக் ஆசிட் போன்றவை அடங்கிய ஆன்டி-ஏஜிங் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்.
முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்படுவதை தவிர்க்க உங்களுக்கு புகை மற்றும் மதுப்பழக்கம் இருந்தால் கட்டுப்படுத்தவும் அல்லது தவிர்த்து விடவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை டயட்டில் தவறாமல் சேருங்கள்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்த மற்றும் ஆரோக்கிய எடையை பராமரிக்க தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
வாய்வழி சுகாதார பிரச்சனைகள் உங்கள் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்பதால் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை கவனித்து கொள்ளுங்கள்.
மனஅழுத்தம் உங்களது வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்தும் என்பதால் யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
க்ளென்சிங், மாய்ஸ்ரைசிங் மற்றும் எக்ஸ்ஃபோலியேட்டிங் போன்ற நல்ல தோல் பராமரிப்பு பழக்கங்களை பின்பற்றுங்கள்.
சருமத்தில் குறிப்பாக முகத்தில் சூடான நீரை பயன்படுத்தாதீர்கள். இப்பழக்கம் சருமத்திலிருக்கும் இயற்கை எண்ணெய்களை அகற்றி வறட்சி மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்தும்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த சீரான இடைவெளியில் ஃபேஷியல் அல்லது மசாஜ் செய்து கொள்ளுங்கள்
நிறைய தண்ணீர் குடிப்பதை தவிர அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள்,காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டு எப்போதும் ஹைட்ரேட்டாக இருங்கள்.
உங்கள் சருமத்திற்கு எரிச்சலூட்டும் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் கடும் கெமிக்கல்ஸ் அல்லது தயாரிப்புகளை பயன்படுத்தாதீர்கள்.
உங்கள் தோற்றத்தை பாதிக்க கூடிய எந்தவொரு விஷயத்தை நீங்கள் எதிர்கொண்டாலும் உரிய மருத்துவரிடம் கலந்தாலோசித்து தேவைப்பட்டால் பரிசோதனைகள் செய்யவும்.
இளமை அல்லது அழகு என்பது உடல் தோற்றத்தை பொறுத்தது மட்டுமல்ல, உடல் தோற்றத்திற்கு அப்பாற்பட்டது. கருணை, இரக்கம், நம்பிக்கை, புத்திசாலித்தனம், படைப்பாற்றல் மற்றும் நகைச்சுவை போன்ற பல குணங்களை உள்ளடக்கியது. சுருக்கமாக சொன்னால் உண்மையான அழகு என்பது உள் மற்றும் வெளிப்புற குணங்களின் கலவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.