முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / வயதான முதியவர்களை மிரட்டி 80 சவரன் நகை கொள்ளை.. கிருஷ்ணகிரியில் முகமூடி கொள்ளையர்கள் தொடர் அட்டகாசம்!

வயதான முதியவர்களை மிரட்டி 80 சவரன் நகை கொள்ளை.. கிருஷ்ணகிரியில் முகமூடி கொள்ளையர்கள் தொடர் அட்டகாசம்!

பாதிக்கப்பட்டவர்கள்

பாதிக்கப்பட்டவர்கள்

Krishnagiri theft | கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரியில் வயதான முதியோரை தாக்கி 80 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டி பகுதியை சேர்ந்த ரங்கசாமி தனது மனைவி சென்னம்மாளுடன் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் நேற்று இரவு அவரது மனைவியுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

இதனை கண்டு அச்சமடைந்த தம்பதியினர் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அப்போது அந்த கொள்ளை கும்பல் கத்தியை காட்டி இருவரையும் மிரட்டி வீட்டில் இருந்த 80 பவுன் தஙக நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 3 லட்ச ரூபாய் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் மனமுடைந்த தம்பதியினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க :  மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே.. புதுச்சேரியில் இனிமையான குரலில் பாடி அசத்தும் திருநங்கை கோபிகா..

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பட்ட பகலில் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் பர்கூர் அருகே தபால் மேடு பகுதியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் டாஸ்மார்க் ஊழியர்களை தாக்கி 4 லட்ச ரூபாய் கொள்ளை அடித்து சென்றனர். கடந்த இரு வாரங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முகமூடி அணிந்து வந்த கொள்ளை கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மார்க் கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி.

First published:

Tags: Krishnagiri, Local News, Theft